உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடேங்கப்பா.... இத்தனை நாட்களா...: 532 நாட்கள் விடுமுறை எடுத்த ஜோ பைடன் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அடேங்கப்பா.... இத்தனை நாட்களா...: 532 நாட்கள் விடுமுறை எடுத்த ஜோ பைடன் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீசும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். தற்போதைய அதிபர் ஜோ பைடன், அதிபர் தேர்தலில் களமிறங்கினாலும், பின்னர் வயது முதிர்வு காரணமாக ஒதுங்கி கொண்டார். 81 வயதாகும் அவர், கடந்த நான்கு வருடங்களில் எடுத்த விடுப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் 532 நாட்கள் விடுப்பு எடுத்து உள்ளார். அதாவது, அவர் பதவிக்காலத்தில் 40 சதவீத நாட்களை விடுமுறையில் கழித்துள்ளார். இது ஐந்து ஆண்டுகளில் சராசரி அமெரிக்க தொழிலாளி ஒருவருக்கு கிடைப்பதை விட அதிகம். தொழிலாளிக்கு ஆண்டுக்கு சராசரியாக 11 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இந்த கணக்குப்படி, ஜோ பைடன் 48 ஆண்டுகள் எடுக்க வேண்டிய விடுமுறையை 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார்.

விமர்சனம்

இத்தனை நாட்கள் ஜோ பைடன் விடுமுறை எடுத்ததை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலை, உள்நாட்டில் பல்வேறு சவால்கள் நிலவி வரும் சூழலில் அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தனை நாட்கள் விடுமுறை எடுப்பது சரியா என கேள்வி எழுப்பி உள்ளனர்.ஆனால், ஜோ பைடன் ஆதரவாளர்கள் கூறும்போது, பைடன் அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலும், இருக்கும் இடத்தில் இருந்து பணிபுரிகிறார். விடுமுறையில் இருந்தாலும் கூட தொடர்ச்சியாக வீடியோ கால் மூலம் கூட்டங்களை நடத்தி ஆலோசனை வழங்குகிறார் என சமாளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

vvv
செப் 08, 2024 22:38

இதில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 416 naatkal


Easwar Kamal
செப் 08, 2024 18:41

biden விடுமுறை எடுத்தால் என்ன edukatii போனால் என்ன? உங்கள் நாட்டில் மோடி இருக்கிறாரே அவர் பாதி நாட்கள் வெளி நாட்டில் தன உளர். இந்த மதம் ஓடிட அமெரிக்கா வர போறார். அதை பற்றி ஏதாவது வய தீதீங்களா. அமெரிக்கா எலேச்டின் வந்தாலும் வந்தது அது என்னமோ தமிழக எலேச்டின் மாதிரி பெரிய விவாதம் போய்க்கிட்டு இருக்கு. அமெரிக்கா இருக்கிற தமிழரர்களோ/இந்தியர்களோ யாரும் ஒட்டு போடா முடியாது. ஒரு சிலரே ஒட்டு பரோடா முடியும். அதை விட்டு வரவான் போறவன் எல்லாம் கமெண்ட்ஸ் கொடுக்கிறான் அதுதான் ஆச்சரியமா இருக்கு.


வைகுண்டேஸ்வரன்
செப் 08, 2024 17:02

பல வாசகர்களின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியில் கூட, சம்பந்தமே இல்லாமல் திராவிடம், நம்ம முதல்வர் என்று உளறி வைத்திருக்கிறார்கள். பரிதாபமாக இருக்கிறது. கூடவே காமெடி யாகவும் இருக்கிறது.


SBM.KANCHI THALAIVAN
செப் 08, 2024 13:51

அமெரிக்க


சமூக நல விரும்பி
செப் 08, 2024 13:40

இது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் இது அமெரிக்க அரசியல் என்றும் நம் முதல்வர் கூறுவார்.


Siva Balan
செப் 08, 2024 13:27

தமிழக முதல்வர்?


Rajah
செப் 08, 2024 13:06

திராவிடர்கள் பார்வையில் 532 நாட்கள் விடுமுறை எடுப்பது சமூக நீதி. 90 நாட்கள் மேல் படிப்பிற்காக விடுமுறை எடுப்பது சமூக நீதிக்கு எதிரானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை