உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிகளில் அணை கட்ட ஏற்பாடு

இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிகளில் அணை கட்ட ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் ஆற்றில் தண்ணீரை தடுக்கும் வகையில் வகையில் தலிபான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்த பிறகு, எல்லை தாண்டிய ஆறுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைப்பதை தடுக்க ஆப்கானிஸ்தான் இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ox1z9l7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது எல்லை தாண்டிய மோதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானும் விரைவில் குனார் ஆற்றில் ஒரு அணை கட்டும் என்று தலிபான் அமைப்பின் தலைவர் மவ்லவி ஹிபதுல்லா தெரிவித்தார்.குனார் ஆற்றில் அணைகள் கட்டுவதை விரைவில் தொடங்கவும், உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் தலிபான் அமைப்பின் தலைவர் அறிவுறுத்தியதாக ஆப்கானிஸ்தான் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. 480 கி.மீ., நீளமுள்ள குனார் நதி, வட கிழக்கு ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைகளில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள புரோகில் கணவாய் அருகே உருவாகிறது. இது குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள் வழியாக தெற்கே பாய்ந்து பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாயில் கடந்து ஜலாலாபாத் நகருக்கு அருகில் காபூல் நதியில் இணைகிறது. குனார் பாகிஸ்தானில் சித்ரால் நதி என்று அழைக்கப்படுகிறது. குனார் பாயும் காபூல் நதி, ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மிகப்பெரிய எல்லை தாண்டிய நதியாகும். தற்போது குனார் மற்றும் காபூல் நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் பணியில் தலிபான் அமைப்பினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ponssasi
அக் 24, 2025 16:46

இந்தியா நேரடியாக தனது தொழிநுட்ப வல்லுனர்களையும், தேவையான பொருளாதார உதவிகளையும் செய்யலாம், இது ஆப்கான் விவசாயத்திற்கும், விவசாயிகள் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் பேருதவியாக இருக்கும்.


MARUTHU PANDIAR
அக் 24, 2025 16:52

காசு யார் போடுவாங்க? ங்கிட்டிருந்து அரை பைசா பேறாது.


தென்றல்மோகன்,இதம்பாடல் இராமநாதபுரம்
அக் 24, 2025 17:01

உன் டாடி ஒரு பாகிஸ்தானியரகத்தான் இருக்க வேண்டும் ஐயாம் கரெக்ட்!


mohana sundaram
அக் 24, 2025 16:33

நம்முடைய ஆமைக்கறி அண்ணன் சைமன் பீட்டர் அவர்களுக்கு விஷயம் தெரிந்தால் உடனே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போர் கொடி தூக்குவார்.


Parasmal Joshi
அக் 25, 2025 18:05

வெல் செட்


SUBRAMANIAN P
அக் 24, 2025 16:26

மொத்த பாகிஸ்தானையும் தரிசாக்கி அங்குள்ளவர்களை சிதறடிப்பதே பயங்கரவாதத்தை ஒழிக்க சிறந்தவழி என்று கண்டுபிடித்துவிட்டார்கள் போல


duruvasar
அக் 24, 2025 16:21

எந்த அரசும் தன மக்களுக்கு எது சிறந்ததோ அதைத்தான் செய்யும்


duruvasar
அக் 24, 2025 16:19

எந்த அரசும் தங்கள் மக்களுக்கு எது சிறந்ததோ அதைத்தான் செய்யும் .


Modisha
அக் 24, 2025 16:49

திமுக அரசு கூடவா ?


MARUTHU PANDIAR
அக் 24, 2025 15:46

எது நடந்தாலும் பாகிஸ்தான் திருந்த வாய்ப்பில்லை. உண்மையான சாத்தான் களின் நாடு பாகிஸ்தான்.


djivagane
அக் 24, 2025 15:33

நல்ல விசயம்தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை