உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு அச்சுறுத்தல்; ரொம்ப கவனமா இருக்கணும்; சொல்வது யாருன்னு பாருங்க!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்; ரொம்ப கவனமா இருக்கணும்; சொல்வது யாருன்னு பாருங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரத்தை கையாள இந்தியா சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பாராட்டி உள்ள எப்ஏ.டி.எப்., அமைப்பு, அதேநேரத்தில் பண மோசடி வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் எனக்கூறி உள்ளது.சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, 'ஜி-7' அமைப்பை சேர்ந்த நாடுகளால் எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு 1989ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து கூறியுள்ளதாவது:பணமோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க இந்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகள் நல்ல பலனை கொடுத்தது. நிதி புலனாய்வு தகவல்களை நல்ல முறையில் பயன்படுத்திய இந்திய அதிகாரிகள் அதனை வெளிநாடு மற்றும் உள்நாட்டிலும் பகிர்ந்து கொண்டு உள்ளனர். டிஜிட்டல் பரிமாற்றம் காரணமாக இந்தியாவில் வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் நிதி வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளது; பணமோசடியையும், பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதையும் கணிசமாக தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க முடிந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வளர்ந்து வரும் நேரத்தில், ஆட்கடத்தல், போதை கடத்தல், பண மோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விவகாரத்தில் இன்னும் கூடுதலான கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைந்து முடிக்க வேண்டும்.காஷ்மீர், அதை சுற்றிய பகுதிகளில் ஐ.எஸ்., மற்றும் அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வேங்கடசுப்பிரமணியன்
செப் 19, 2024 22:40

இந்திய அரசு மற்றும் நீதியரசர்கள் இதனை கூர்ந்து நோக்க வேண்டும்


GMM
செப் 19, 2024 20:13

சட்ட விரோத கீழ்நிலை பண பரிமாற்ற தடுப்பு நன்று. மேல் மட்ட, அரசியல் பண மோசடி தடுப்புக்கு பல தடுப்பு வழிகளில் நீதிமன்ற வழக்கு. பண மோசடி விசாரணையை உச்ச நீதிமன்றம் துரித படுத்த வேண்டும் என்று எடுத்து கொள்ளலாம். ஜனாதிபதி அவர்கள் ஒத்திவைப்பு கலாச்சாரம் பற்றி கவலை. நட்பு நாடுகள் ஆமை வேக விசாரணை பற்றி கவலை. பொருட்படுத்தாத நீதிமன்றம் . கவலையில்லாத மத்திய அரசு ? தேசிய அளவில் ஒருவருக்கு ஒரு வாடிக்கையாளர் எண் . இதன் அடிப்படையில் தனியார், தேசிய , வெளிநாட்டு வங்கி கணக்கு துவங்க அனுமதி. தொண்டு நிறுவனர்கள், அரசில் கட்சிக்கும் முழு வரி விலக்கு நீக்கம் .பண பரிவர்த்தனை அறிய குறைந்த சதவீதம் வரி வசூலிக்க வேண்டும். மருத்துவம் , வழக்கு ,சினிமா தயாரிப்பு, பத்திர பதிவு பண செலவு அனைத்தும் வங்கி கணக்கு மூலம் மட்டும். இலவச அரசு மருத்துவம் , கல்வி, வழக்கிற்கு சம்பந்த பட்ட நபர் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். , ஏழையென்றால் மாநில நிர்வாகம் ,மத்திய அரசு கட்டணம் செலுத்த வேண்டும். காஸ்மீர் சுற்றுப்பகுதியில் பயங்கர வாதம் ஒழிக்க சீனா ஒத்துழைப்பு தேவை.


Barakat Ali
செப் 19, 2024 19:39

பெரும்பாலான ஆங்கில ஏடுகள் கொடுத்திருந்த தலைப்பு இதுதான் - FATF மத்திய அரசுக்குப் புகழாரம் ......


தாமரை மலர்கிறது
செப் 19, 2024 18:44

பணபரிமாற்றத்தை தடுக்க அமலாக்கத்துறை இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். திமுக அரசை கலைப்பது அமைதிக்கு நல்லது.


ஆரூர் ரங்
செப் 19, 2024 18:28

இத சுப்ரீம் கோர்ட் கிட்ட சொல்லுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை