வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழர்களுக்கு பாதகமா
மேலும் செய்திகள்
அமைதியாக முடிந்தது இலங்கை அதிபர் தேர்தல்
22-Sep-2024
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முதல் கட்டத்தில் இழுபறி ஏற்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட ஓட்டு எண்ணிக்கையைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுரா குமார திசநாயகே, 56, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அவர் இன்று பதவியேற்க உள்ளார்.நம் அண்டை நாடான இலங்கையில், அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக மிகவும் அதிகபட்சமாக, 38 பேர் இதில் போட்டியிட்டனர். விருப்ப ஓட்டு
இலங்கை அதிபர் தேர்தல், விருப்ப ஓட்டு அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரை தேர்வு செய்யலாம். இதில், 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பெறாத நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பமாக வாக்காளர்கள் தேர்வு செய்த ஓட்டுகள் எண்ணப்படும். அந்த ஓட்டுகள், முதல் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களின் ஓட்டுகளுடன் சேர்க்கப்படும்.இந்நிலையில் நேற்று முன்தினம் ஓட்டு பதிவு முடிந்ததும் ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில், என்.பி.பி., எனப்படும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட, மார்க்சிஸ்ட் கொள்கையை பின்பற்றும், ஜே.வி.பி., எனப்படும் ஜனதா விமுக்தி பேரமுனா கட்சியின் அனுரா குமார திசநாயகே, 42.30 சதவீத ஓட்டுகளை பெற்றார். சமாகி ஜன பலவேகயாவின் சஜித் பிரேமதாசா, 32.75 சதவீத ஓட்டுகளைபெற்றார். முதன்முறை
சுயேச்சையாக போட்டியிட்ட தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 17 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றார். யாருக்கும், 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை. இலங்கை அதிபர் தேர்தல் இதுவரை இரண்டாம் கட்டத்துக்கு சென்றதில்லை. தற்போது முதல் முறையாக, இரண்டாம் கட்ட ஓட்டு எண்ணிக்கை நிலைக்கு சென்றது. இரண்டாம் கட்ட ஓட்டு எண்ணிக்கையின்போது, தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே உட்பட, 36 வேட்பாளர்களின் விருப்ப ஓட்டுகள் எண்ணப்படாது என, அந்த நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இன்று பதவியேற்பு
இதன்படி, முதல் இரண்டு இடங்களில் உள்ள அனுரா குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு கிடைத்துள்ள இரண்டாம் விருப்ப ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று மாலை துவங்கியது.இதில், அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றதாக, அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அவர் இன்று பதவியேற்க உள்ளதாக ஜே.வி.பி., தெரிவித்துள்ளது.அனுரா குமார திசநாயகேவுக்கு, முதல் கட்டத்தில் 42.30 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில், 55.89 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. அதே நேரத்தில் சஜித் பிரேமதாசாவுக்கு முதல் கட்டத்தில் 32.75 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில், 44.11 சதவீத ஓட்டுகளும் கிடைத்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.கடந்த 2022ல் இலங்கை பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது. அப்போது தொடர்ச்சி 14ம் பக்கம்இலங்கையின் புதிய...முதல் பக்கத் தொடர்ச்சிஅதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, பெரிய அளவில் வெற்றியும் கண்டார். ஆனாலும் விலைவாசியை கட்டுப்படுத்தாதது அவரது தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.கடந்த, 2022ல் நாடு முழுதும் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். இந்தப் போராட்டங்களை முன்னின்றி நடத்தியதுடன், தன் பிரசாரத்தின்போது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதாக அளித்த வாக்குறுதிகளே, அனுரா குமார திசநாயகேவுக்கு அதிக ஆதரவு கிடைத்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் பாக்கியசெல்வம், முதல் கட்ட ஓட்டு எண்ணிக்கையில், 2,26,343 ஓட்டுகளும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, 3,42,781 ஓட்டுகளும் பெற்றனர்.
வேட்பாளர் அனுரா திசநாயகே சஜித் பிரேமதாசாமுதல் கட்டஓட்டுகள் 56,34,915 43,63,035சதவீதம் 42.30 32.75இரண்டாம்கட்ட ஓட்டுகள் 1,05,264 1,67,867மொத்த ஓட்டுகள் 57,40,179 45,30,902மொத்த ஓட்டு சதவீதம் 55.89 44.11
இலங்கை அதிபர் தேர்தலில் வென்றுள்ள அனுரா குமார திசநாயகே, நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். பள்ளியில் படிக்கும்போதே, ஜே.வி.பி., எனப்படும் ஜனதா விமுக்தி பேரமுனா கட்சியில் இணைந்து பணியாற்றினார். கல்லுாரியிலும் இது தொடர்ந்தது.படிப்படியாக கட்சியில் அவர் முன்னேறி வந்தார். கடந்த, 1995ல் கட்சியின் மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரானார். தொடர்ந்து, 1998ல் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரானார். கட்சி தலைவர் சோமவான்சா அமரசிங்கேவுடன் இணைந்து செயல்பட்டார். அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அரசுக்கு இந்தக் கட்சி ஆதரவு அளித்தது. கடந்த, 2004ல் அமைச்சரானார் திசநாயகே. ஆனால், புலிகள் அமைப்புடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்காக, 2005ல் அவரும், கட்சியின் மற்ற அமைச்சர்களும் பதவி விலகினார்.ஜே.வி.பி. கட்சியின் தலைவராக, 2014ல் பொறுப்பேற்றார் திசநாயகே. கடந்த, 2004 முதல் தொடர்ந்து மூன்று எம்.பி.,யாக தேர்வானார்.கடந்த, 2019ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதுபோல, 2022ல் நடந்த அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இலங்கை அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன் வரை, அனுரா குமார திசநாயகே, சீனா ஆதரவு கொள்கை உடையவராக பார்க்கப்பட்டார். ஆனால், இதை அவர் மறுத்தார். 'நான் மக்களுடன் மட்டுமே நெருக்கமாக இருப்பேன். வேறு யாருடனும் அல்ல' என்று அவர் கூறியிருந்தார்.இந்தாண்டு துவக்கத்தில் அனுரா குமார திசநாயகே தலைமையில், ஜே.வி.பி., கட்சி நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அப்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் உள்ளிட்டோரை அவர்கள் சந்தித்தனர். இந்த ஐந்து நாள் பயணத்துக்கு, இந்திய அரசே ஏற்பாடு செய்திருந்ததாக அப்போது அவர் கூறினார். இதுதான், திசநாயகேவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள தொடர்பு.ஜே.வி.பி., கட்சி, இந்தியாவுக்கு எதிரான கொள்கை உள்ள கட்சி என்று பரவலாக கூறப்படுகிறது. அங்கு உள்நாட்டு போர் நடந்தபோது, இந்தியாவுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு சலுகைகள் வழங்கவும் இந்தக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால், நிதி நெருக்கடியில் இலங்கை சிக்கியபோது, இந்தியா பெருமளவு உதவிகளை செய்தது. அண்டை நாடாகவும், பிராந்தியத்தில் வலுவான நாடாகவும் உள்ளதாகவும், இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை அவர் கடைப்பிடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தொழிலதிபர்கள் பலர், இலங்கையில் முதலீடுகள் செய்வதற்கு தயாராக உள்ளனர். அந்த நல்ல வாய்ப்புகளை இழக்க அவர் விருப்ப மாட்டார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.