உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; அமெரிக்காவில் கொண்டாட்டம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; அமெரிக்காவில் கொண்டாட்டம்

நியூயார்க்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாட, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டனர். அங்கு ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் ஒலித்த வண்ணம் இருக்கிறது. கிட்டத்தட்ட, 500 ஆண்டுகளுக்கு முன், சீரும் சிறப்புமாக இருந்த அயோத்தி, நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் இன்று புத்துயிர் பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று(ஜன.,22) பிற்பகல்12.20 மணிக்கு கோலாகமாக நடக்க உள்ளது. இதனால் அயோத்தி விழாக் கோலம் பூண்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=673j2xgv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காண, உலக முழுவதும் உள்ள ஹிந்துகளும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், ஸ்கிரினில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பப்பட உள்ளது.இதனால் கொண்டாடி மகிழ ஏராளமானோர் திரண்டனர். அங்கு ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களும் உரத்த குரலில் ஒலித்தன. பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

இராம தாசன்
ஜன 22, 2024 22:46

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா லோட்டஸ் கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ சீதா ராமா கல்யாணத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து ஜெய கோஷம் எழுப்பி சிறப்பாக கொண்டாடினர்


Sathyasekaren Sathyanarayanana
ஜன 22, 2024 18:57

தமிழக திருட்டு திராவிட அந்நிய மத அடிமை அரசியல் வியாதிகளுக்கு வயிரெச்சல் அதிகமாகி இருக்கும், இன்றைய தொழில்நுட்ப உலகில் இந்த திருடர்கள் அனுமதி தராவிட்டால் யாரும் ஸ்ரீ ராமரின் கோவில் நிகழ்ச்சியை பார்க்க முடியாதா? இவர்களின் கெளதரமான செயல் நல்லதற்குத்தான், இப்போது நடுநிலை பேசிக்கொண்டு இருந்த பல முட்டாள் இந்துக்களின் கண்களை திறந்துவிட்டார்கள். ஜெய் ஸ்ரீ ராம்.


Nachiar
ஜன 22, 2024 18:35

கனடாவிலும் பல இடங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஜெய் ஸ்ரீ ராம்.


Barakat Ali
ஜன 22, 2024 11:48

ராமர் ஓர் சிறந்த ....


PERUMAL C
ஜன 22, 2024 13:45

அவர் ஒரு அவதார புருஷர்


Seshan Thirumaliruncholai
ஜன 22, 2024 10:01

தற்போதைய அறிவியல் உலகில் எதையும் மறைக்க முடியாது. தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக எதையும் ஒளிபரப்பாவிடிலும் எங்கோ ஒரு மூலையில் காண இயலும். சர்வ வல்லமை படைத்தவன்.மூன்று பணிகளை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்திட அனுமதித்துள்ளான். தமிழக அரசு தரம் தாழ்ந்து நடவடிக்கை எடுப்பது நிச்சியம் எதிர்வினை இருக்கும்.


Durai Kuppusami
ஜன 22, 2024 10:01

ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீராம் ....ராமஜெயம் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் ..சீதாராம் ...ஜானகிராம் .... உலகம் வாழ் இந்துக்கள் அனைவருக்கும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் .....ஜெய் ஸ்ரீராம்


Ramesh Sargam
ஜன 22, 2024 09:00

அகிலமெங்கிலும் இன்று ஜெய் ஸ்ரீ ராம் ஒளிக்கப்படுகிறது. நாமும் கூறுவோம் ஜெய் ஸ்ரீ ராம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை