உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காஸியாபாத் வந்தடைந்தார் ஷேக் ஹசீனா

காஸியாபாத் வந்தடைந்தார் ஷேக் ஹசீனா

டாகா: வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா, ராணுவ விமானம் மூலம் உ.பி.,யின் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான படை தளத்திற்கு வந்தடைந்தார்.மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, சகோதரியுடன் ராணுவத்திற்கு சொந்தமான சி-130 விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு ராணுவ ஆட்சி அமலாகி உள்ளது. ஷேக் ஹசீனா எங்கு சென்றார் என்ற தகவல் வெளியாகாத நிலையில், அவர் திரிபுரா தலைநகர் அகர்தலா சென்றார். அங்கிருந்து காஸியாபாத் வந்தடைந்தார். பிறகு வேறு நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இங்கிருந்து ஷேக் ஹசீனா லண்டன் செல்ல உள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஹசீனாவின் மகள் வீடு லண்டனில் தான் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

siva
ஆக 12, 2024 17:03

கசீனா எல்லாப்பிரச்சணைகளும் ஓய்ந்த பின் நாடு திரும்புவார் தேர்தலில் போட்டியிடுவார் வெற்றியும் பெறுவார்.ஆனால் தேர்தல் நடாத்துவார்களா? அல்லது பொம்மை பிரதமரைவைத்து காலம் கடத்துவார்களா என்பதே கேள்விக் குறி.


Jayaprakash Jayaprakash
ஆக 12, 2024 02:08

சீனா பாகிஸ்தான் சதி உள்ளது நம் நாட்டில் முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் நம்முடைய மோடிஜி அரசாங்க மே அவர்கள் விரும்பும் வரை அடைக்கலம் கொடுக்க வேண்டும் நன்றி ?


enkeyem
ஆக 05, 2024 19:56

சப்பை மூக்கன் சீனன் கை வரிசை இதில் இருக்கிறது.


Ramani Venkatraman
ஆக 05, 2024 19:04

போராளிகளுக்கு ராணுவம் தான் சரி.. பேச்சு வார்த்தையை எல்லாம் மசிய மாட்டாங்க கலியின் கோளாறு ?


R Dhasarathan
ஆக 05, 2024 19:04

நல்ல அமைதியான நாட்டை சதி செய்து கெடுத்து விட்டார்கள். இரண்டு வருடங்கள் அங்கு இருந்தேன், அருமையான மக்கள் பழக உயிர் கொடுப்பார்கள். லஞ்சம் மிக அதிகம் தான்...


MUTHU
ஆக 05, 2024 20:00

பொதுவாக மேற்குலக நாடுகளைப்போல் இதை போன்ற நாடுகளின் அரசு உயரதிகாரிகள் பெண் முதல்வர் அல்லது அதிபர் அல்லது பிரதமர் பேச்சை கேட்கமாட்டார்கள். பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ, காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி, பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஹசீனா விஷயத்திலும் சில காலங்கள் மட்டுமே இது விதிவிலக்கு. இந்தியாவில் பொதுவாக பெண்கள் அடிமையாய் நடத்தப்பட்டாலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அரசு அதிகாரிகள் அடங்கி தான் இருந்துள்ளனர்.


RAJ
ஆக 05, 2024 18:31

பங்களாதேஷ் கெட்டகாலம் ஆரம்பித்துவிட்டது. மம்தா பங்களாதேஷ் பிரதமர் ஆக வாய்ப்பு உள்ளது.


வாய்மையே வெல்லும்
ஆக 05, 2024 18:10

இதேமாதிரி கூடியவிரைவில் மமதையும் போன்டி கூட்டணி அரசர்களும் நாட்டை விட்டு என்றைக்கு ஓடிப்போகிறார்களோ அன்று தான் தாய்நாடு பாரதத்துக்கே விமோசனம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ