உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டனின் எப் 35பி போர் விமானத்திற்கு மீண்டும் சோதனை; ஜப்பானில் அவசர தரையிறக்கம்

பிரிட்டனின் எப் 35பி போர் விமானத்திற்கு மீண்டும் சோதனை; ஜப்பானில் அவசர தரையிறக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35பி போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.உலகின் மிக விலை உயர்ந்த போர் விமானங்களில் ஒன்றான பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35 பி போர் விமானம், கடந்த மாதம் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், 25 பிரிட்டன் பொறியாளர் குழு, திருவனந்தபுரத்திற்கு வந்து, விமானத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டது. பழுது சரிபார்க்கப்பட்டு, இறுதியில் 37 நாட்களுக்குப் பிறகு அந்த விமானம் தாயகம் திரும்பியது. இந்த நிலையில், ஜப்பானின் கிரிஷிமா நகரில் உள்ள ககோஷிமா விமான நிலையத்தில், பிரிட்டனின் எப் 35பி போர் விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விமானம் பிரிட்டனின் ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வந்ததையும் ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. எப் 35பி போர் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால், ககோஷிமா விமான நிலையத்தின் ஓடுபாதை சுமார் 20 நிமிடங்கள் மூடப்பட்டது. இதனால், புறப்பட தயாராக இருந்த 6 விமானங்கள் மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் உள்ளிட்ட பல்வேறு கப்பல்கள், ஜப்பான் மற்றும் அமெரிக்க ராணுவத்துடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆப்பரேஷன் ஹைமாஸ்ட் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சிகள் ஆகஸ்ட் 12 வரை தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kasimani Baskaran
ஆக 11, 2025 03:56

எந்த ஒரு தொழில் நுணுக்கமும் முதிர்ச்சியடைய சில காலம் பிடிக்கும். பல போர்களில் பயன்படுத்தப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்தபின்னர் ஒரு விமானம் உலகில் தலை சிறந்தது என்று சொல்ல முடியும். F35 அந்தவகையில் புதிய விமானம். முழுவதுமாக சிறப்பாக செயல்பட பல போர்களை பார்க்கவேண்டும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 11, 2025 01:12

அதே டிரஸ்..அதே டெய்லர்....ஒரே மாதிரியான இயந்திர கோளாறு....அந்நிய நாட்டு விமான நிலையங்களில் தரையிறக்கம்.....உளவு பார்க்கபடுகிறதா ?? சீன உளவு கப்பல் கடலில் இருந்து உளவு பார்க்கும் போது.....விமான தளத்திலிருந்து உளவு பார்க்க முடியாதா ??? ஒரே ரக விமானம்... கோளாறு.... விமானதள தரையிறக்கம்..... அனைத்தும் ஒரு புள்ளியில் வருகிறதா ???


Santhakumar Srinivasalu
ஆக 10, 2025 20:55

எப 35 பியை அமெரிக்காவுக்கு அனுப்பலாம் இல்ல கயலாங்கடைக்கு போடலாம்!


Natarajan Ramanathan
ஆக 10, 2025 20:23

உண்மையில் எல்லா F35 விமானங்களும் அதன் தாயகமான அமெரிக்காவுக்கு திரும்புவதுதான் சரியானது.


Santhakumar Srinivasalu
ஆக 10, 2025 20:56

ரொம்ப சரி.


ஆரூர் ரங்
ஆக 10, 2025 19:52

நாம தப்பிச்சோம். நம்ம தலையில கட்ட முடியல.


Shivakumar
ஆக 11, 2025 04:11

அந்த கடுப்புதான் அந்த டோங்க்ரா மண்டையனுக்கு... இந்திய மேல் 50% வரி போட இதுவும் ஒரு காரணம்


Ramesh Sargam
ஆக 10, 2025 19:41

கடவுள் படைத்த மனிதன் உடம்பிலேயே பல நூறு கோளாறுகள். அப்படி இருக்க மனிதன் தயாரித்த விமானத்தில் இருக்காதா?


Chess Player
ஆக 10, 2025 19:17

ஒன்று கேரளாவில் கோளாறானது , இப்போது ஜாப்பனீஸ். இதை தான் உசத்தி என்று சொல்ல்கிறார்கள் :


என்றும் இந்தியன்
ஆக 10, 2025 19:09

இந்த விமானத்தை யாருமே வாங்கமாட்டார்கள்?????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை