உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் ஹிந்து கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல்; காலிஸ்தான் ஆதரவு கும்பல் அட்டூழியம்

கனடாவில் ஹிந்து கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல்; காலிஸ்தான் ஆதரவு கும்பல் அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டவா: கனடாவின் பிராம்டனில் உள்ள ஹிந்து கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.கனடாவின் பிராம்டனில் ஹிந்து கோவில் ஒன்று உள்ளது. எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இந்த கோவில் வளாகத்திற்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் பக்தர்கள் மீது குச்சிகளை வைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ui6aht53&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று பிராம்டனில் உள்ள ஹிந்து கோவிலில் நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு கனடியர்களும் தங்கள் நம்பிக்கையைச் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி., சந்திரா ஆர்யா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'காலிஸ்தான் தீவிரவாதிகள் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டனர். பிராம்டனில் உள்ள ஹிந்து கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் இடமாக கனடா மாறிவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.பிராம்டன் மேயர் கூறியதாவது: கனடாவில் மத சுதந்திரம் கட்டாயம் இருக்க வேண்டும். அனைவரும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பாக உணர வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் அருகே நடக்கும் வன்முறைச் செயல்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மக்களை ஒன்றிணைத்து குழப்பத்திற்கு முடிவுகட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Ramesh Sargam
நவ 04, 2024 21:29

அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்வதறியாமல் அந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் ஆதரவாளர்களிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறார். அவர்களுக்கு பயந்துதான் அவர் இந்தியாவை எதிர்க்கிறார். நிலைமை இப்படியே போனால், அங்குள்ள இந்தியர்களுக்கு மட்டுமல்ல பிரச்சினை, அங்குள்ள அனைத்து நாட்டவர்களுக்கும் அந்த காலிஸ்தான் ஆதரவாளர்களால் பிரச்சினை. சீக்கிரம் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கு ஒரு முடிவு காணவேண்டும். இல்லையென்றால் பங்களாதேஷ் ஹசீனா மாதிரி அவரும் உயிருக்கு பயந்து வேறு நாட்டில் தஞ்சமடையவேண்டிய நிலைமை ஏற்படும்.


SADHIK ADAM
நவ 04, 2024 18:50

இரத்தம் தக்காளி சட்னி ஞாபகம் தான் வருகிறது


Rpalnivelu
நவ 04, 2024 17:52

ஜஸ்டின் த்ருடோ இன்னொரு கமெனி. பாக்கில் பிறக்க வேண்டியவர் ஆப்கானில் வாழவேண்டியவர் தப்பி தவறி கனடாவில் வாழ்கிறார்


KavikumarRam
நவ 04, 2024 17:13

என்னத்த மரூ கண்டிக்கிறது. என்ன நடவடிக்கை எடுத்தீங்க. இதே பயங்கரவாதிகளால் பாகிஸ்தான் மாதிரி கனடா அழியப்போகுது. இந்தியாவின் கெஜ்ரிவால் டுரூடோ. சாவப்போறீங்கடா.


Ravi Kulasekaran
நவ 04, 2024 16:29

கனடா துதரக உறவுகளை முறித்து கொள்ள வேண்டும்


Vijay D Ratnam
நவ 04, 2024 15:18

இந்தியாவில் தனிநாடு காலிஸ்தான் பருப்பு வேகாது. அதுவும் பாஜக சுளுக்கெடுத்துவிடும் என்று உணர்ந்து கொண்டதால் இனி வரும் காலத்தில் கனடாவில் ஒரு பகுதியை பிரித்து காலிஸ்தான் கேட்டு காலிப்பயலுவோ பொறுக்கித்தனத்தில் ஈடுபடுவார்கள்.


N.Purushothaman
நவ 04, 2024 12:20

இவனுங்க கூடிய விரைவில் கனடாவை பிரித்து தங்களுக்கு தனி நாடு கொடுன்னு கேக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை ...அப்பன் வழியையே மவனும் எடுத்துள்ளது தவறானது என்பது காலம் வெகு விரைவில் புரிய வைக்கும் ...


N.Purushothaman
நவ 04, 2024 12:17

பாகிஸ்தான் ஐ எஸ் ஐ அமைப்பிற்கு இதில் தொடர்பு இருக்கலாம் .. எந்த நோக்கத்திற்காக சீக்கிய வழிபாட்டு முறை தோற்றுவிக்கப் பட்டதோ அதையே மழுங்க செய்யும் வகையில் காலிஸ்தான் அமைப்புக்கள் மற்ற தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் அதனை வளர்த்துவிடுவோர்களின் கைப்பாவையாக மாறி உள்ளது வெக்க கேடானது ...


Oru Indiyan
நவ 04, 2024 11:56

இந்த கேடு கெட்ட செயலுக்கு அமெரிக்கா வாய் திறக்காமல் இருக்குமே. ஓ. நாளை தேர்தல். அப்புறம் யாரோ?


Svs Yaadum oore
நவ 04, 2024 11:26

இந்த கனடா ஹிந்துக்களுக்கு ஆதரவாக திராவிட கணியக்கா சென்னை மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலம் சென்று கவர்னர் மாளிகையை முற்றுகை இடுவார் ....பாலஸ்தீன் காசா போன்று உலகில் எங்கெல்லாம் சமூக நீதிக்கு பங்கம் வந்தாலும் திராவிட கனியாக்க அங்கெல்லாம் அதை தடுத்தி நிறுத்தி மத சார்பின்மையை காப்பாற்றுவார் ....சமத்துவம் சகோதரத்துவத்தை விடியல் திராவிடனுங்க ஒரு நாளும் கை விட மாட்டார்கள் ...அது அவர்கள் உயிர் மூச்சு ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை