உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அதிபர் டிரம்ப் தகவல்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அதிபர் டிரம்ப் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பரஸ்பர வரிகளை விதிக்க காலக்கெடுவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, 'இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் டொனால்டு டிரம்ப் கூறியதாவது; இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியாவுடனான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்றால், இந்தியாவுக்கு 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். இந்தியா ஒரு நல்ல நண்பராக இருந்து வருகிறது. எனது வேண்டுகோளின் பேரில் அவர்கள் பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்து வருகிறது. இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு, அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஐந்து சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்ததைக் கருத்தில் கொண்டு, இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Nathan
ஜூலை 30, 2025 19:02

வர்த்தக ஒப்பந்தம் ஒன்றும் ஏதோ ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துவது அல்ல ஒப்பந்தம் செய்து கொள்வதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமை என்ன என்று தீவிர ஆலோசனை செய்து தான் முடிவு செய்ய வேண்டும். ட்ரம்ப் அவசர அவசரமாக முடிவு செய்ய வேண்டும் என்று விரும்பினாலும் இந்திய அரசு பல்வேறு தரப்பினரின் ஆலோசனை பெற்று தான் முடிவு செய்யும் அது வரை அமெரிக்கா எதிர்மறை எண்ணங்களை ஏற்படும் வகையில் நடந்து கொள்ள கூடாது. அவர்கள் அவ்வாறு செய்தால் ஒப்பந்தம் செய்து கொள்வது மேலும் தாமதம் ஏற்படலாம்


என்றும் இந்தியன்
ஜூலை 30, 2025 16:14

இதற்குத்தான் வேலை எய்யும் வயது நரம்பு 58 என்று அறிவிக்கப்பட்டது எல்லா அரசு அலுவலகத்திலும், பிறகு அதிக ஜனத்தொகை காரணத்தினால் 60 என்று அறிவிக்கப்பட்டது. 60 வயதிற்குப்பிறகு நம்முடைய அவயவங்கள் நிலைப்பாடுகள் மாறிவிடும் 70க்குப்பிறகு இன்னும் மாறிவிடும் அவருக்கு வயது 79 ஆகவே அவரது உடல் மூளை செயல்திறன் 1 வயதுக்கு குழந்தையின் செயல் திறன் போல மாறியுள்ளது ஆகவே அவர் உளறல்கள் ஒரு எல்லை கடந்து இருக்கின்றது. அவர் இனிமேலும் அந்த பதவியில் இருந்தால் அவருக்கு பைத்தியம் பிடித்து சட்டை கிழித்துக்கொண்டு வெளியில் நடமாடினாலும் நடமாடுவார். அவர் இறப்பு நாள் டிசம்பர் 24, 2025 என்று என் மனதில் தோன்றுகின்றது தவறோ உண்மையோ அதை பற்றி கவலையில்லை. அவர் கடைசி நாட்கள் பக்கத்தில் தான் இருக்கின்றது வெகு தொலைவில் இல்லை .


Karthik Madeshwaran
ஜூலை 30, 2025 13:58

அமெரிக்காவின் மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா பயப்பட கூடாது. நிதானமாக பொறுமையாக ஒப்பந்தம் செய்தால் போதும். சோன்பப்ளி மண்டையன் அப்படி தான் கத்திட்டு கிடப்பான்.


SUBRAMANIAN P
ஜூலை 30, 2025 13:34

இந்திய பாகிஸ்தான் போருல நான்தான் போரை நிறுத்த சொன்னென்ன்னு ஒரு புருடா விட்டியே, அதை உண்மைன்னு நம்பி இங்குள்ள தேசத்துரோக வெளிநாட்டு கைக்கூலிகள் குய்யோ முறையோன்னு கத்திக்கிட்டு இருக்கானுவோ. முதல்ல தெரியாம பொய் சொல்லிட்டேன்ன்னு மன்னிப்பு கேளு. அப்புறம் வர்த்தக உடன்படிக்கை பற்றி பார்க்கலாம்.


Subburamu Krishnasamy
ஜூலை 30, 2025 11:15

The terrorists leader is destroying the world economy. He is the greatest danger to the entire universe


Jack
ஜூலை 30, 2025 09:20

அமெரிக்காவில் சம்பளம் உயர்வதில்லை ..விலைவாசி மட்டும் உயர்கிறது ...


Ravi Chandran K, Pudukkottai
ஜூலை 30, 2025 08:46

இதை குறிப்பிட்ட தேதியை சொல்லி அந்த தேதிக்குள் இந்தியா அமெரிக்காவுடன் நிச்சயம் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று சொன்ன உங்கள் சிஷ்யர் ராகுலுக்கு கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்.


Harindra Prasad R
ஜூலை 30, 2025 08:46

ஹீரோவாகியே நீங்கள் இந்தியாவிடம் ஸிரோ ஆகப்போறிங்க டிரம்ப் . உங்க டாலர் கதை முடிஞ்சா உங்க கதைம் முடியும் வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை