உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் அமலாக்க துறை : எப்.ஏ.டி.எப்., பாராட்டு

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் அமலாக்க துறை : எப்.ஏ.டி.எப்., பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, நம் நாட்டின் சொத்து மீட்பு நடைமுறையை பாராட்டியதுடன், உலகளவில் முன்மாதிரி அமைப்பாக அமலாக்கத் துறை விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. புதிய அறிக்கை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசை தலைமையிடமாக வைத்து, எப்.ஏ.டி.எப்., அமைப்பு செயல் படுகிறது. 'சொத்து மீட்பு வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகள்' என்ற பெயரில் புதிய அறிக்கையை நேற்று வெளியிட்ட அந்த அமைப்பு, சொத்துக்களை பறிமுதல் செய்வதில், நம் நாட்டின் அமலாக்கத்துறை உலகளவில் முன்மாதிரியாக செயல்படுகிறது என்றும் பாராட்டி உள்ளது. எப்.ஏ.டி.எப்., அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பொருளாதார மற்றும் நிதி சார்ந்த குற்றங்களிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் திறன் கொண்ட ஒரு வலுவான கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது. நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட சொத்து மீட்டெடுப்பு வழிமுறையை அந்நாடு உருவாக்கி உள்ளது. இது, சட்டப்பூர்வ கருவி களையும், பல நிறுவனங்களுக்கு இடையிலான செயல்பாட்டு ஒத்துழைப்பையும் இணைக்கிறது. குற்றவாளி மற்றும் குற்றவாளி அல்லாத நபர்களின் சொத்துக்களை முடக்கும் வசதியும் இந்தியாவில் உள்ளது. இதன் மூலம், விசாரணை முடிவடைவதற்கு முன்னரே சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும். குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்களை விரைவாக முடக்கவும், பறிமுதல் செய்யவும், இந்தியாவின் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டம் உதவுகிறது. ஒருங்கிணைப்பு இது, எப்.ஏ.டி.எப்., அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே, இந்தியாவின் அமலாக்கத்துறையை முன்மாதிரியாக காட்டுகிறது. சி.பி.ஐ., - அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்பு களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு தான், இந்தியாவின் சொத்து மீட்டெடுப்பு வெற்றிக்கு முக்கிய காரணம். இதை, மற்ற நாடுகள் பின்பற்றுவதற்கான தேவை உருவாகி உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rathna
நவ 06, 2025 11:34

ED யை சொல்லப்படும் குற்றசாட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வாங்கி குடுக்க முடியவில்லை என்பது. அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து திருடன்களையும் விட்டு விடலாமா என்று மக்கள் யோசிக்க வேண்டும்.


NALAM VIRUMBI
நவ 06, 2025 10:33

உச்ச நீதி மன்றத்தில் உள்ள நீதிபதிகள் பெரும்பாலும் தேச விரோத காங்கிரசு கட்சி உருவாகிய நியமன அடிப்படையில் வந்தவர்கள். எனவே அவர்களிடம் நாட்டுப் பற்றை எதிர்பார்க்க முடியாது. இந்த நியமன முறைமையை மாற்ற மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அதற்கு இன்னமும் பலன் கிடைக்கவில்லை. நமது அமலாக்கத் துறை தமிழக திருட்டு திராவிஷ குடும்ப சொத்துகளை மீட்டாலே போதும். தமிழகம் பட்ட ரூபாய் 10 லட்சம் கோடி கடனையும் அடைத்து விடலாம். இந்தக் கருத்தை திரு சுப்ரமணியம் சுவாமி அவர்களே கூறி உள்ளார். அமலாக்கத் துறை இந்த நல்ல காரியத்தை செய்தால் தமிழக மக்கள் கைகூப்பி வணங்குவர்.


Ramesh Trichy
நவ 06, 2025 09:22

FATF பாராட்டுகிறது, ஆனால் உச்சநிதிமன்றம் அமலகத்துறைமீது எரிந்து விழுகிறது , என்னத்த சொல்ல ...


Tetra
நவ 06, 2025 08:49

தெரியலியே


சாமானியன்
நவ 06, 2025 07:38

இந்திய மக்களே ! கருப்பு ஆடுகள் உச்சநீதி மன்றத்திலே ஜாஸ்தி. அவர்கள் ஒழுங்காக இருந்தால் நிறைய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கம்பி எண்ணுவார்கள். இவர்கட்கு பெயிலே கொடுக்க கூடாது.


Srinivasan Narasimhan
நவ 06, 2025 03:56

நமக்குதான் ரூல்ஸ் பிடிக்காதே


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
நவ 06, 2025 03:31

Cc to High courts and Supreme Court....!!!


spr
நவ 06, 2025 02:13

"நம் நாட்டின் சொத்து மீட்பு நடைமுறையை பாராட்டியதுடன், உலகளவில் முன்மாதிரி அமைப்பாக அமலாக்கத் துறை விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது." பாராட்டுவதற்கொரு மனசாட்சி வேண்டாமா? இதுவரையில் எந்த வழக்கில் நம் அமுலாக்கத்துறை விசாரணையை முடித்து நிரூப்பிக்கும் வகையில் சாட்சியங்களை அளித்திருக்கிறது? எத்தனை பேர் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள்? அதிலும் பாஜகவில் இணைந்துவிட்டால் வழக்கு கூட இல்லை பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற வகையில் வழக்கெல்லாம் தொடுத்தாலும், எந்த வழக்கையும் இதுவரையில் நிருப்பித்து எவருக்குமே தண்டனை வாங்கித் தராமல் குற்றம் புரிந்தோருக்கு துணையாக நிற்கும் இந்திய அமுலாக்கத்துறையைக் கண்டு நம் கழகத் தலைவர்கள் வேட்டியை அவுத்துப் போட்டுவிட்டு சிரிக்கிறார்கள்


Senthoora
நவ 06, 2025 05:31

உங்க கருத்துக்கு கழுவி ஊத்ததாபோறாங்க, உண்மையை சொன்னதுக்காக சங்கிகள் தங்கள் பங்குக்கு கருத்து வரும்,


naranam
நவ 06, 2025 01:30

ராகுல் விடியல் மற்றும் லாலுக்களுக்கு மிகவும் எரியுமே!


தாமரை மலர்கிறது
நவ 06, 2025 00:49

செந்தில் பாலாஜியை கைது செய்தது உலக அளவில் சவாலான செயல் தான். சிறப்பாக அமலாக்கத்துறை செயல்படுகிறது.