உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  கருணை கொலை சட்டம் ஸ்லோவேனியாவில் பொது வாக்கெடுப்பு

 கருணை கொலை சட்டம் ஸ்லோவேனியாவில் பொது வாக்கெடுப்பு

லுப்லஜனா: ஸ்லோவேனியாவில் கருணை கொலை சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பொதுவாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த ஆண்டு, அந்நாட்டு பார்லிமென்டில் கருணைக் கொலை சட் டம் குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பான்மையான எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால், கடந்த ஜூலை யில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபை மற்றும் பழமைவாத குழுக்கள் உள்ளிட்டோர், இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் 40,000க்கும் அதிகமானோர் கையொப்பமிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து இச்சட்டம் குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அதன்படி, நேற்று பொது வாக்கெடுப்பு நடந்தது. இதன் முடிவை பொறுத்து கருணை கொலை தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டம் இறுதி வடிவம் பெறும் என கூறப்படுகிறது. ஸ்லோவேனியாவில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 17 லட்சம். இதில் 20 சதவீதம் பேர் எதிராக வாக்களித்தால் கருணை கொலை சட்டம் ரத்து செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை