உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதம்

கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் சமீபத்தில் குடியேற்ற விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டது. குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், அங்குள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் கனடாவில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்திய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில் இந்த முடிவை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது திரவ வடிவிலான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும் அவர்கள், அதனையும் நிறுத்தி விட்டு காலவரையற்ற முழு உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். புதிய விதிகள் காரணமாக ஏற்கனவே 50 இந்தியர்கள் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vasudevan
மே 29, 2024 19:57

நிறைய மாணவர்கள் 6 லட்சம் வரை வந்தார்கள் 3 வருடம் வரை. இதை தவிர நிரந்தர குடியுரிமை பெற்று 2015 முதல் 2020 வரை 3 மில்லியன் வரை வந்தார்கள். இங்கு வேலை இல்லை. வீடு இல்லை. எல்லாம் விலை அதிகம். அதனால எல்லா விசாவும் குறைக்க ஆரம்பித்து விட்டார்கள். நம் நாட்டிலே top colleges கனடா விட குறைந்த செலவில் படிக்க முடியும். வெளிநாட்டு மோகத்தில் இங்கு வந்து அவதி படுகிறார்கள். இந்திய மாணவர்கள் என்றாலே பஞ்சாபி மாணவர்கள் போல் ஒரு அலட்சிய பார்வை. இந்திய மக்கள் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் வேலை தேடும் போதும் அதே பார்வை. மறைமுகமாக இன வெறி உண்டு. கனடா 20 வருடங்கள் முன்பு வரை கொஞ்சம் பரவாயில்லை. இப்போது வருவது தேவையற்றது. ???


RAMAKRISHNAN NATESAN
மே 29, 2024 19:41

காலிஸ்தான் தீவிரவாதத்தை கனடா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது .... அதை ஒடுக்க நினைக்கிறது இந்தியா ....


Subash BV
மே 29, 2024 19:00

THIS IS FOOLISHNESS. INDIANS NOT THE NATIVES OF CANADA. EVERYONE HAS TO FOLLOW THE LOCAL LAWS. ELSE, HAVE TO LEAVE FOR THEIR COUNTRY. WORLD STANDARD.


ஸ்ரீ ராஜ்
மே 29, 2024 14:49

உண்மை. ஆனால், கனடா வருவதற்க்கு முன் என்னனென்ன வாக்கு உறுதிகள் Promise சொல்லி விசா கொடுத்தார்களோ அதை Promise மாற்றினால் அது நம்பிக்கை துரோகம், பொய் சொல்லி ஏமாற்றி அழைத்து வந்து இன்று ஏமாற்றுகிறார்கள் என்று பொருள்.


Kumar Kumzi
மே 29, 2024 14:39

இந்தியாவில் இருக்கும் கள்ள குடியேறிகளையும் விரட்ட வேண்டும்


Lion Drsekar
மே 29, 2024 14:32

இங்கு வாழ்ந்தால் மட்டுமே ஜாதி, மதம், மொழி அடையாளங்களுடன் நாம் உலாவருகிறோம். வெளிநாட்டுக்கு சென்றால் நாம் இந்தியன். நம் கலாச்சாரம், அரசாங்கம், அவர்களின் வழிகாட்டுதல் வேறு, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நிலைகளில் செயல்படும்போது, நாம், தனித்து செயல்பட்டால் அவர்களுக்கு இன்னமும் கோபம்தான் வரும், ஆகவே அவர்களுடன் கலந்து பேசி, நம் நாட்டின் தூதரகத்துடன் கலந்து பேசினால் நல்ல தீர்வு கிடைக்குமே . வந்தே மாதரம்


S Ramkumar
மே 29, 2024 14:29

ஜஸ்டின் ரூடோ என்ன செய்தாலும் இங்கிருக்கும் ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் கண்டு கொள்ளாது. சி ஏ ஏ என்று சொன்னால் உடனே பொங்குவார்கள்.


Vathsan
மே 29, 2024 16:59

உனக்கு ஏன் வலிக்குது?


Vathsan
மே 29, 2024 13:21

அவன் நாடு அவன் உரிமை. இந்திய மாணவர்கள் உண்ணாவிரதம் தேவையற்றது. இந்திய மாணவர்கள் அந்தந்த நாட்டு சட்டத்தை மதித்து நாடு திரும்பவேண்டும்.


Mohan
மே 29, 2024 19:15

பலே சரியான கருத்து. ஆனால் ஐயா நீங்கள் எல்லோரும் இந்திய நாட்டின் CAA சட்டத்தை எதிர்க்கும் அதி புத்திசாலிகளான விடியல் கூட்டணி மற்றும் அதன் சூப்பர் தலைவர்களுக்கு விளக்கி சொல்ல வேணுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அந்த கோல்கத்தா அம்மா மட்டும் காது கொடுத்து கேட்காது சரி.


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி