உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மேட்ச் நடக்கும் போதே உச்சா போன கால்பந்து வீரர்..! வெளியே போ.. ரெட் கார்டு காட்டிய நடுவர்

மேட்ச் நடக்கும் போதே உச்சா போன கால்பந்து வீரர்..! வெளியே போ.. ரெட் கார்டு காட்டிய நடுவர்

லிமா: கால்பந்து போட்டியின் போது உச்சா போன வீரரை நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எச்சரிக்கை

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட போட்டியாக கால்பந்து கருதப்படுகிறது. உலக கோப்பை, ஐரோப்பிய கால்பந்து தொடரின் போது குவியும் ரசிகர்களே இதற்கு சாட்சி. ஆட்டத்தின் போது விதிகளை மீறியோ அல்லது வன்முறையாகவோ விளையாடினால் சம்பந்தப்பட்ட வீரர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவர்.

ரெட் கார்டு

அண்மையில் பெருவில் நடந்த கால்பந்து போட்டியில் ஆட்டத்தின் நடுவே சிறுநீர் கழித்த வீரரை ரெட் கார்டு காட்டி போட்டியில் இருந்து நடுவர் வெளியேற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

விறுவிறு போட்டி

கோபா பெரு கால்பந்து போட்டியில் atletico awajun அணியும், Canttorcillo FC அணியும் மோதின. போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் atletico awajun அணி வீரர் செபாஸ்டியன் முனோஸ் என்பவர் திடீரென எல்லைக் கோட்டை தாண்டி வெளியில் சென்றார்.

சிவப்பு அட்டை

அடுத்த சில நொடிகளில் அனைவர் முன்னிலையில் அவர் சிறுநீர் கழிக்க ஆரம்பித்துள்ளார். எதிர்பாராத அவரின் இந்த செயலை கண்ட எதிரணி வீரர்கள் ஆட்ட நடுவரிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக செயல்பட்ட அவர், செபாஸ்டியன் முனோசை எச்சரித்தார். அடுத்த சில நொடிகளில், சட்டை பையில் இருந்த சிவப்பு அட்டையை எடுத்துக் காட்டி உடனடியாக ஆட்டக்களத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.

வைரல் வீடியோ

என்ன நடக்குது என்று புரியாமல் செபாஸ்டியன் முனோஸ் ஒரு கணம் தடுமாறியபடி வெளியேற, இந்த காட்சியை ரசிகர் ஒருவர் தமது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். பலரும் கடுமையாக விமர்சிக்க,இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
ஆக 20, 2024 18:29

தமிழக பெண்கள் அரசு கல்லூரி கழிவறைகளை போல அங்கேயும் கழிவறைகளை மைண்டைன் பண்ணாம விட்டுட்டாங்களாம் , அதனால் அவர் கண்ட்ரோல் பண்ணி நின்றுள்ளார் போல ?


N.Purushothaman
ஆக 20, 2024 14:33

இயற்க்கை உபாதைகளை கழிக்க எளிதில் இடம் மாற்றம் செய்ய கூடிய சிறிய அளவிலான நடமாடும் கழிப்பறைகளை மைதானத்திற்கு வெளியில் வைப்பது நல்லது ....கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் ஓடி கொண்டே இருக்க வேண்டும் ..போட்டியை நடுத்துபவர்களுக்கு இது ஒரு பாடம் ....அவர் வேண்டுமென்றே செய்திருந்தால் அது ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானது சரியே ...


Shekar
ஆக 20, 2024 14:04

ED ஆட்களை பாத்துடாரோ என்னவோ


RAMAKRISHNAN NATESAN
ஆக 20, 2024 14:03

இதற்கு முன்பும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்ததுண்டு .........


RAMAKRISHNAN NATESAN
ஆக 20, 2024 14:00

நீரிழிவு காரணமாக இருக்கலாம் ..... அதாவது உந்துதலை அடக்கும் சக்தி குறைந்து கொண்டே அந்த இல்லாமலேயே போய்விடும் ..... அல்லது மூ. தாரையில் நோய்த்தொற்று இருக்கலாம் .... தேவை மருத்துவ உதவி .....


ஆரூர் ரங்
ஆக 20, 2024 14:00

எக்ஸ்ட்ரா 10 ரூபாய் அமைச்சரை அமலாக்கப் பிரிவினர் கடுமையாக விசாரித்ததால் ஆடையில் நம்பர் 1 போன வருத்தத்தை ஒரு கிழகத் தலைவர் (படத்துடன்) வெளியிட்டிருந்தார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை