உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் வலுவான உறவு; வங்கதேச அரசின் முகமது யூனுஸ் உறுதி

இந்தியாவுடன் வலுவான உறவு; வங்கதேச அரசின் முகமது யூனுஸ் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: 'இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது' என வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதற்கிடையே, இஸ்கான் அமைப்பு நிர்வாகி துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் தேச விரோத குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டார். இதனால் பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது. இந்நிலையில், டாக்காவில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் மிஸ்ரி சந்தித்து பேசினார்.

நெருக்கமான உறவு

இது குறித்து, முகமது யூனுஸ் கூறியதாவது: இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது.வங்கதேச மக்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் இருந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகள் வங்கதேசத்தில் பதற்றதை உருவாக்கியது. இவ்வாறு அவர் கூறினார்.

தாக்குதல்

இது குறித்து மத்திய வெளியுறவுத்தறை செயலாளர் மிஸ்ரி கூறியதாவது: சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமீபத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தேன். வங்கதேச இடைக்கால அரசுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இந்தியாவின் விருப்பத்தை தெளிவுபடுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

veeramani
டிச 13, 2024 10:13

பங்களாதேஷ்... இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. எழுபதுகளில் யூனுஸ் இருந்தாரா என சரியாக தெரியவில்லை. யுனிஷின் அதிகார போக்கு மமதையுடன் இருக்கிறார். பாரத தேசம் எப்படி உருவாக்கியதோ அதேபோல ஒரு யுனியன் பிரதேசமாக்கவும் தெரியும். புரிந்து கொண்டால் சரி


venugopal s
டிச 10, 2024 21:36

இலங்கை விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தலையிடுவது தான் தவறு, அது அயல் நாட்டு விவகாரம். ஆனால் வங்க தேச உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் தலையிடுவது எங்கள் உரிமை என்பார்களே நமது சங்கிகள்!


C.SRIRAM
டிச 10, 2024 19:30

இந்த ஆளுக்கு எப்படி நோபல் பரிசு ?. நய வஞ்சகர். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஆதரவில்லாமல் தவிக்க விட வேண்டும்


AMLA ASOKAN
டிச 10, 2024 19:12

வங்க தேசத்தில் வாழும் இந்துக்களில் பெரும்பாலோர் EX அதிபர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தொண்டர்கள் . இவர்கள் இன்று அரசியல் எதிரிகளாக கருதப்படுகிறார்கள் . ஹசீனாவின் காலத்தில் எதிர்க்கட்சியினரை ராணுவத்தின் மூலம் அழிப்பதில் இவர்கள் பெரும் பங்காற்றினர் . இன்று இவர்கள் மீது வஞ்சம் தீர்க்கப்படுகிறது . இது மதரீதியான செயல் அல்ல . உலகம் முழுவதும் பல நாடுகளில் கிளர்ச்சிக்குப்பின் ஏற்படும் நிகழ்வு தான் . இந்தியாவின் மீடியாக்களில் இது மிகைப்படுத்தப்படுகிறது . வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் உண்மையை உரைக்கின்றன. அதையும் படித்தோ கேட்டால் தான் உண்மை நிலை விளங்கும் . ஹிந்து முஸ்லீம் வேற்றுமையை விரும்புவோர்க்கு இது அல்வா .


jayvee
டிச 11, 2024 11:22

திராவிட அரிசிமூட்டை எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவது சரி.. பாலஸ்தீன் யூதர்களின் தாய் நாடு என்பதை ஒத்துக்கொள்வீர்களா ? சில பல சிலுவைகளை பங்களாதேஷ் ராணுவம் சிலுவையில் அறைந்தால் இதைத்தான் சொல்வீர்களா ?


Nandakumar Naidu.
டிச 10, 2024 18:22

முதலில் வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை வன்முறையில் இருந்தும் இனப்படுகொலையிலிருந்தும் காப்பாற்று


Saminathan C
டிச 10, 2024 17:44

அண்டை நாடுகள் ஒற்றுமையோடு இருந்தால் ஆபத்து காலங்களில் உதவியாக இருக்கும்


Sivagiri
டிச 10, 2024 13:28

அங்கே , பாகிஸ்தானியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன - -


canchi ravi
டிச 10, 2024 13:24

இந்த வாய்கூசாமல் புளுகும் இந்தியாவுக்கே எச்சரிக்கை விட்டவன் பொம்மை தலைவன், அமெரிக்கா கைக்கூலி, இவனுக்கு நோபல் பரிசு ஒரு கேடா. ஹிந்துக்கள் கொல்லப்பட்டால் உங்கள் நாடு அழிவது உறுதி.


Sivagiri
டிச 10, 2024 12:12

அமெரிக்காக்காரன் - உலகில் எங்கேயாவது , அவர்களது நாட்டவர்களுக்கு சிறு பிரச்சினை என்றாலும் , உடனே - பொருளாதார தடை , என்பார்கள் - மற்ற நாட்டவர்களும் தடை விதிக்க வேண்டும் என்றும் , மீறினால் அவர்கள் மீதும் பொருளாதார தடை - என்பார்கள் - - அவர்களது பிரச்சினை என்றால் , அது உலக பிரச்சினை என்பார்கள் - ஐநா - உலக வங்கி - சர்வதேச நிதியம் - அனைத்திலும் கட்டுப்பாடு கொண்டு வருவார்கள் - - அதே இத்தாலிக்காரன் , சுண்டைக்காய் மாதிரி இருந்து கொண்டு , தன்னை சுற்றிலும் உள்ள மெகா சைஸ் அடிப்படைவாத / பயங்கரவாத நாடுகளை சமாளித்து , நாளை வரக்கூடிய பிரச்சினையை இன்றே தீர்த்து விடுவான் . .


RAJ
டிச 10, 2024 12:00

பொய் சொல்றதே இவனுக்கு பொழப்பா போச்சு.. மமதை பேகத்தை வுட்டு ஒரு காட்டு காட்டணும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை