உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் குஜராத்தி பெண் சுட்டுக்கொலை; 21 வயது வாலிபர் கைது

அமெரிக்காவில் குஜராத்தி பெண் சுட்டுக்கொலை; 21 வயது வாலிபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் குஜராத்தி பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பல மணி நேரத்திற்கு பிறகு, 21 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் தென் கரோலினாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரண் படேல் செப்டம்பர் 16ம் தேதி தான் நடத்தி வரும் பெட்ரோல் பங்கில் பணத்தை எண்ணி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணை சுட்டுவிட்டு, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.பின்னர் விசாரணையில் உயிரிழந்தது குஜராத்தி பெண் என்பது தெரியவந்தது. பின்னர் கொள்ளையன் ஜைடன் மேக் ஹில் என்று அடையாளம் காணப்பட்டான். அவனை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். தென் கரோலினா சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஜைடன் மேக் ஹில் பதுங்கி இருந்த இடத்தை அடைந்தனர். அங்கு, ஜைடன் மேக் ஹில்லுக்கும், சட்ட அமலாக்க நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பல மணி நேரம் நீடித்தது. இருப்பினும், பல மணி நேர மோதலுக்கு பிறகு ஜைடன் மேக் ஹில்லை கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
செப் 21, 2025 12:55

அண்ணன் ட்ரம்ப் H1 விசா விஷயத்தில் மும்முரமாக உள்ளார். இதையெல்லாம் சரிசெய்ய அவருக்கு நேரம் இல்லை போங்க.


Barakat Ali
செப் 21, 2025 11:21

இந்தியர்ன்னு குறிப்பிடலாமே ???? ஏன் இல்லீங்களா ????


vadivelu
செப் 21, 2025 12:56

குஜாதி, தமிழ, ஆந்திரா என்றாலும் இந்தியர் என்று இந்தியர்கள் புரிந்து கொள்வார்கள்


Barakat Ali
செப் 21, 2025 13:19

நான் கேட்டதற்குப் பின்னணிக் காரணம் உண்டு .....


கல்யாணராமன் சு.
செப் 21, 2025 14:08

இந்தியர்ன்னு குறிப்பிடலாமே ???? ... மிகச் சரியான கருத்து ...


Indian
செப் 21, 2025 10:50

வழக்கமா இளம்பெண் என்று எழுதறது தானே பழக்கம்


Vasan
செப் 21, 2025 10:26

இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொலையா? திரு மோடி ஜி அவர்களை உசுப்பேற்றும் வேலையா? ஒரு குஜராத்தி பெண்மணியின் உயிர் மதிப்பு அவ்வளவுதானா? கைது செய்யப்பட நபரை இந்திய சிபிஐ விசாரிக்க வேண்டும். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் மிகு மோசமாக உள்ளது. வன்முறையை கண்டிக்கிறோம், வன்மையாக.


Indian
செப் 21, 2025 10:48

அமேரிக்கா சென்று கண்டிப்பது தானே ..இங்கே எதுக்கு ஒப்பாரி


Vasan
செப் 21, 2025 11:14

இந்தியன் என்ற பெயரில் என் கூற்றுக்கு எதிர்மறை கூற்றை பறைந்துள்ள அந்நியனுக்கு வணக்கம். 140 கோடி பேரும் அமெரிக்காவுக்கு நேரில் சென்று கண்டிப்பது என்பது சாத்தியமில்லை. ஆதலால் தான் பத்திரிக்கை மூலமாக தங்கள் தங்கள் அபிப்ராயத்தை மக்கள் தெரியப்படுத்துகின்றனர். கண்டனத்தை தெரிவிக்கின்றனர். ஆழ்ந்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர். இது தான் நிதர்சன உண்மை. பிறர் பேச்சை இகழாதீர்கள்.


Sangi Mangi
செப் 21, 2025 11:27

நீ சும்மா இங்க வந்து ஊளை இட்டால் மட்டும் போதாது கம்பி 5 லிட்டர் பெட்ரோல் வாங்கி உன் தலையில் ஊற்றி கொண்டு அமெரிக்கா எம்பொன்சி முன்னால் தீ குளிக்கணும் அப்பதான் குஜராத்தி பொண்ணுக்கு நீதி, நியாயம் கிடைக்கும்..


kumz rocks
செப் 21, 2025 11:54

இந்தியன் பெயரில் பதுங்கியிருக்கும் மூர்க்க காட்டுமிராண்டியை முதலில் உதைத்து விரட்ட வேண்டும்


Vasan
செப் 21, 2025 12:14

நான் அஹிம்சா வழியில் போராட வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே பத்திரிகை மூலமாக என் கண்டனத்தை, இரங்கலை பதிவு செய்தேன். நீங்களோ வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்கிறீர்கள். ஒரு உயிரிற்கு மாற்றோரு உயிர் என்பது என் கொள்கை அல்லவே. நான் இவ்வளவு அறிவுரை கூறியும், நீங்கள் அதற்க்கு செவி சாய்க்காமல் உயிரை மாய்க்க நினைத்தால் என்செய்வது ? வயது முதிப்பின் காரணமாக என்னால் சென்னைக்கு பயணிப்பது என்பது சாத்தியமில்லை. தாங்கள் கூறுவதை தாங்களாகவே நிறைவேற்றி கொள்ளுங்களேன். அதற்க்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை