உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை வரம்பை மீறி விட்டதாக குற்றச்சாட்டு

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை வரம்பை மீறி விட்டதாக குற்றச்சாட்டு

பெய்ரூட்: 'தொலைதொடர்பு கருவிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் வாயிலாக அனைத்து வரம்பையும் இஸ்ரேல் தாண்டிவிட்டது' என ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார். லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்திய 3,000 பேஜர்கள் சமீபத்தில் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலியானவர்களின் இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் நடந்தபோது, அதில் பங்கேற்றவர்களின் வாக்கிடாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்தன.இந்த இரு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 3,250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை ராக்கெட்டுகள் வாயிலாக தாக்கியதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துஉள்ளனர். இந்நிலையில் தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா நேற்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், 'இந்த தாக்குதலால் கடும் இழப்பை சந்தித்துள்ளோம். இதன் வாயிலாக சிவப்புக்கோடு உள்ளிட்ட அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் தாண்டி விட்டது' எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, பேஜர் கருவியில் வெடிமருந்து பொருத்தப்பட்டது தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து, திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே குண்டுவெடிப்பு சம்பவத்தை இஸ்ரேல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.பேஜர் குண்டுவெடிப்பால், லெபனான் ராணுவம் உஷாரான நிலையில், மீண்டும் ஒரு எச்சரிக்கை தரும் வகையில், வாக்கிடாக்கி கருவிகளை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை