உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமைதியை ஏற்படுத்த நாங்க ‛ரெடி: பிரதமர் மோடி

அமைதியை ஏற்படுத்த நாங்க ‛ரெடி: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வார்சா: ‛‛ எந்த பிரச்னைக்கும் தீர்வு காணவும், அமைதியை ஏற்படுத்தவும் நட்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளது'', என பிரதமர் மோடி கூறியுள்ளார்.போலந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: ஐரோப்பிய யூனியன் மக்கள் தொகைக்கு, இந்தியாவில் தினசரி நடக்கும் யுபிஐ பரிமாற்றம் (எண்ணிக்கையில்) சமமாக உள்ளது. உக்ரைன் போரின் போது, இந்திய மாணவர்களை மீட்க போலந்து செய்த உதவியை இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள்.உணவு பதப்படுத்துதலில் போலந்து உலகளவில் முன்னிலையில் உள்ளது. இந்த தொழிலுடன் தொடர்பில் உள்ள போலந்து நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க வேண்்டும். நீர்மேலாண்மை, கழிவு பொருட்கள் மேலாண்மை, நகர்ப்புற கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அடுத்தாண்டு ஐரோப்பிய யூனியன் தலைவர் பதவியை போலந்து ஏற்க உள்ளது. இதன் மூலம் இந்தியா - ஐரோப்பிய யூனியன் உறவு வலுப்பெறும். உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசிய மோதல் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. போர்க்களத்தில் எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக நம்புகிறது. எந்த பிரச்னையிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு ஒட்டு மொத்த மனிதநேயத்திற்கு இழப்பாகி விடும். இந்த விவகாரத்தில் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படவும், ஒத்துழைப்பு வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Easwar Kamal
ஆக 23, 2024 00:12

உள்நாட்டுல ஹிந்து/முஸ்லீம் மற்றும் ரெண்டு மாநிலங்களுக்குல் ப்ரிர்வினை பண்றது. தனக்கு ஒட்டு அழிக்காத மாநிலங்களை புறம் தள்ளுவது. எல்லா பண்ணிட்டு வெளிநாட்டில போய் அமைதி ஏற்பட பாடு படுவேன்னு நல்ல புளுக வேண்டியது. உங்களையும் சில naddu நம்புது அதுதன வேடிக்கை


அப்பாவி
ஆக 22, 2024 21:51

நானும்தான் ரெடி. நாம சொன்னா அவிங்க கேக்கணுமே?


Ramesh Sargam
ஆக 22, 2024 20:04

இன்று பல உலகநாட்டு தலைவர்கள் உலகெங்கிலும் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவரவும், உலகெங்கிலும் அமைதியை நிலைநாட்டவும் இந்திய நாட்டினால் மட்டும், அதுவும் குறிப்பாக இந்திய பிரதமர் மோடி அவர்களால் மட்டும் முடியும் என நம்புகின்றனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது. எல்லாம் நல்லதே நடக்கும்.


Selvarajan
ஆக 23, 2024 00:21

ஜிங் ஜங் ஜிங் ஜங் பிஜேபி க்கு


மோகன்
ஆக 22, 2024 18:19

நம் விஸ்வகுரு மோடியால் இதை கண்டிப்பாக சாதிக்க முடியும்.


Selvarajan
ஆக 23, 2024 00:22

கொஞ்சம் லாஜிக்கா பேசுங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை