உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜூலை 14ல் இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் குழுவினர் பூமி திரும்புவார்கள்; நாசா அறிவிப்பு

ஜூலை 14ல் இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் குழுவினர் பூமி திரும்புவார்கள்; நாசா அறிவிப்பு

வாஷிங்டன்: விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் ஜூலை 14ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக மாறினார். அங்கு அவர், வெந்தயம், பச்சை பயிறு வளர்த்து வருகிறார்.ஜூன் 27ம் தேதி முதல் குழுவினர் தங்கள் அறிவியல் ஆய்வுகளைத் தொடங்கியதால், 14 நாட்கள் இன்றுடன் நிறைவடைந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்கு முன் ஆய்வு காலம் 14 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜூலை 14ம் தேதி, விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளி நிலையத்திலிருந்து பூமி திரும்ப உள்ள வீரர்களை வரவேற்க விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nada Rajan
ஜூலை 10, 2025 22:38

நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் மிக்க நன்றி இந்திய மண்ணில் பிறந்த சுக்லாவை சாதனை படைக்க வைத்துள்ளனர்


புதிய வீடியோ