உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மீள முடியாத சோகத்தில் இந்தியக் குடும்பங்கள்

மீள முடியாத சோகத்தில் இந்தியக் குடும்பங்கள்

நியூயார்க் : அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பின் போது பலியான 3,000 பேரில், இந்தியர்கள் சிலரும் இருந்தனர். சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னும் கூட, அவர்களின் குடும்பத்தினர் மீள முடியாத மன வேதனையில் உள்ளனர்.

நியூஜெர்சி நகரைச் சேர்ந்த அர்ஜுன் மிர்புரியின் மகன் ராஜேஷ், 30, இரட்டை கோபுரத் தகர்ப்பில் பலியானவர்களில் ஒருவர். அவரது இழப்பு குறித்து மிர்புரி கூறுகையில், 'அவர் வர்த்தக மையத்தில் பணிபுரியவில்லை. ஆனால், அன்றைய தினம் அங்கு நடந்த ஒரு வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். அப்போது தான் அந்த துயரச் சம்பவம் நடந்தது. இனிமேல் அதுபோல் ஒரு சம்பவம் நடக்கவே கூடாது. எந்த ஒரு பெற்றோருக்கும் இது போன்ற ஒரு துயரம் நிகழக்கூடாது' என்றார்.

அவரைப் போல, ஜான் மத்தாய் என்ற டாக்டர் தனது இளைய சகோதரர் ஜோசப்பை அச்சம்பவத்தில் பறிகொடுத்தவர். 'என் சகோதரனின் இழப்பு என்றுமே இழப்பு தான். மனித குல வரலாற்றில் இது ஒரு மோசமான சம்பவம்' என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ