உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை: டிரக் டிரைவர் வெறிச்செயல்

அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை: டிரக் டிரைவர் வெறிச்செயல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் 29 வயதான இந்திய வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.உ.பி., மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் கவின் தசாவூர். இவர் மெக்சிகோவை சேர்ந்த விவியனா ஜமோரா என்பவை ஜூன் 29ம் தேதி திருமணம் செய்தார். அம்மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள இண்டி நகரில், காரில் சென்று கொண்டிருந்த கவின் தசாவூர், டிரக்கை முந்தி சென்றார். இதனால், அவருக்கும், டிரக் டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காரில் இருந்து இறங்கிச் சென்ற கவின் தசாவூர், டிரக் டிரைவருடன் துப்பாக்கியை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, டிரக் டிரைவர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே கவின் தசாவூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்புசாமி
ஜூலை 22, 2024 08:38

நிறைய நம் ஊர் அட்டைக்கத்தி பொம்மைதுப்பாக்கி ஹீரோக்கள் நடிச்ச படங்களை பாத்திட்டு போய் கேள்வி கேட்டாரு. அவன் போட்டுத்தள்ளிட்டான்.


RK
ஜூலை 21, 2024 20:36

நம் நாட்டில் உள்ளது போல் இருந்தால் இதுதான் நடக்கும். எப்போதுமே ஆணவம் இல்லாமல் இருப்பதே சிறந்தது.


RK
ஜூலை 21, 2024 20:36

நம் நாட்டில் உள்ளது போல் இருந்தால் இதுதான் நடக்கும். எப்போதுமே ஆணவம் இல்லாமல் இருப்பதே சிறந்தது.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 17:43

முதலில் துப்பாக்கியை எடுத்தது நம்ம ஆளுதான் .....


Palanisamy Sekar
ஜூலை 21, 2024 15:02

கோபத்தின் சன்மானம் இதுதான். மனதில் பெரிய சினிமா ஹீரோ மாதிரி நடந்துகொண்டால் மரணமே பரிசாக வருகின்றது. துப்பாக்கி காட்டி மிரட்டல் விடுவது சரியில்லை என்று உணரக்கூட முடியாமல் மரணித்துவிட்டாரே. ஆழ்ந்த அனுதாபங்கள்


Senthoora
ஜூலை 21, 2024 18:15

நம்மாளுங்க இங்கே காட்டும் வித்தையை அங்கே காட்டினாள் இதுதான் நடக்கும்.


rAstha
ஜூலை 21, 2024 14:56

என்ன நடந்தது என்பதை, இவர்களை. தொடர்ந்து காரில் வந்து கொண்டிருந்த மற்றொருவர் எடுத்த காணொளி இணையத்தில் கிடைக்கிறது. Road Rage ஆணவத்தில் ஆத்திரமடைந்து எதிரியை துப்பாக்கியால் சுட முதலில் முயற்சித்தது இந்தியர்தான். டிரக் டிரைவர் தற்காப்பிற்காக, இந்தியரை சுட, குண்டு நெற்றியில் பாய்ந்து சம்பவ இடத்திலே மரணம் .


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 21, 2024 14:17

குற்றவாளியை போலீஸ் கைது செய்யவில்லை. தற்காப்புக்காக சுட்டதில் தவறில்லை என்று டிரக் டிரைவர் தனது பயணத்தை தொடர அனுமதித்து அனுப்பி விட்டனர். சரிதானே


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி