உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‛டைம்‛ இதழ் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இந்தியர்கள் பெயர்

‛டைம்‛ இதழ் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இந்தியர்கள் பெயர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ‛டைம் ‛ இதழ் வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டின் மிகவும் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‛டைம்' இதழ் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மிகவும் செல்வாக்குமிக்கவர்களின் 100 பேர் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான 100 பேர் பட்டியலை ‛டைம்‛ இதழ் வெளியிட்டுள்ளது.இதில் மல்யுத்த ஒலிம்பிக் வீராங்கனை சாக்சிமாலிக், பாலிவுட் நடிகை ஆலியாபட், பாலிவுட் நடிகர்,இயக்குனர் தேவ் பட்டேல், மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., சத்ய நாதெல்லா, உலக வங்கி தலைவர் அஜெய்பங்கா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

nv
ஏப் 18, 2024 04:59

அரசியல் ரீதியாக சாக்ஷி மல்லிக் சேர்க்கப்பட்டார் என்பதாலேயே இந்த மாதிரி தரவரிசையில் சந்தேகம்.. மற்றபடி அப்படி ஒன்றும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை..


தாமரை மலர்கிறது
ஏப் 18, 2024 00:22

இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் அதானி மற்றும் அம்பானி உலக முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிப்பார்கள் பிஜேபி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் உலகை அண்ணாந்து வியந்து பார்க்க வைக்கிறது முதல் பத்து பணக்கார பட்டியல் இடங்களில் பாதி இந்தியர்களுக்கு வந்துசேரும்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி