உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக நாடுகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் கோலாகலம்

உலக நாடுகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் கோலாகலம்

நியூயார்க்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அமெரிக்காவின் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த கொண்டாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று யோகா செய்தனர். நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் யோகா செய்தனர். இதில் பங்கேற்றவர்கள் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணைக்கைதிகள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்ற பதாகைகளை கொண்டு வந்தனர். இந்திய தூதரகம், டெல் அவிவ் மாநகராட்சி, இஸ்ரேலிய கலாசாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது.அயர்லாந்தின் க்ளாரே டொனேகல் மற்றும் டவ் நகரில் யோகா தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.சீனாவின் ஷாங்காய் நகரிலும் இந்திய தூதரக அலுவலகம் யோகா தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தது.நமது அண்டை நாடான நேபாளத்திலும் யோகா தின கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.தாய்லாந்தின் புகெட் நகரில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த யோகா தின கொண்டாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா செய்தனர்.ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டப்பட்டது.மேலும் சில படங்கள்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பச்சையப்பன் கேபால் புரம்
ஜூன் 21, 2024 19:35

ஏன் அல்லாரும் மூக்கைப் பிடிச்சிட்டு அத்தனை ந்த்தமான இடத்திலே உக்காந்துட்டு இருக்காங்க???


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை