உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் தேர்தலில் ஈரான் தலையீடு: அமெரிக்க உளவுத்துறை அலறல்

அதிபர் தேர்தலில் ஈரான் தலையீடு: அமெரிக்க உளவுத்துறை அலறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் தலையிட முயற்சி செய்கின்றனர்; டிரம்ப் பிரசாரம் தொடர்பான தகவல்களை திருட முயன்று வருவதாக, ஈரான் ஹேக்கர்கள் மீது அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரீசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்பும் களமிறங்கி உள்ளனர்.இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஐ., மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஈரானை சேர்ந்த ஹேக்கர்கள், கடந்த ஜூன் மாதம் முதல் டிரம்ப் பிரசாரம் தொடர்பான தகவல்களை திருடி அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு அனுப்ப முயற்சி செய்கின்றனர். அதிபர் தேர்தல் தொடர்பாக முரண்பாடுகளை தூண்டி, நம்பிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த திருடப்பட்ட தகவல்களை தாங்கள் பெறவில்லை என ஜனநாயக கட்சி எனக் கூறியுள்ளது. இந்த தகவல்களை சில ஊடக நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் எந்த ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

veeramani
செப் 20, 2024 09:27

முற்பகல் வி ணை செய்யின் பிற்பகலில் முடியும்


J.V. Iyer
செப் 19, 2024 17:18

ஈரானின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.


sankaranarayanan
செப் 19, 2024 16:54

தீவிரவாதி பண்ணுவாய் ஆதரிக்கும் அமெரிக்காவிற்ற்கு இது ஒரு பாடம் நீ மற்றவர்களுக்கு நோட்டிசு அனுப்பினால் மற்றவர்கள் உனக்கும் நோட்டீசு அனுப்ப காலம் வரும்


ஆரூர் ரங்
செப் 19, 2024 16:47

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா.


அப்பாவி
செப் 19, 2024 16:43

2020 ல் டொனால்ட் ட்ரம்ப் எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமல் இரானிய ஜெனரல் சலாமியை ட்ரோன் மூலம் குண்டு வீசி அரசியல் படுகொலை செய்தார். ட்ரம்ப் மீண்டும் அதிபராகக் கூடாதுன்னு இரான் தீயா வேலை செய்யுது. அவரையே தூக்க முயற்சிக்கிறது. மூன்று முறை கொலை முயற்சி நடந்திருக்கிறது.


Barakat Ali
செப் 19, 2024 16:15

வழக்கமா நீங்க மத்தவங்களுக்கு பண்ணுறதை ஈரான் உங்களுக்கு பண்ணக்கூடாதா ????


நிக்கோல்தாம்சன்
செப் 19, 2024 16:08

நம்பிட்டோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை