உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 50 பாலஸ்தீனியர்கள் பலி

காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 50 பாலஸ்தீனியர்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் - மற்றும் பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா, உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்தாண்டு அக்டோபரில் தாக்குதலை துவக்கியது. காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛‛ஹமாஸ்'' என்ற பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போரை நடத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களாக இந்த போர் நடைபெற்று வருகிறது.இன்று ( ஆக.,21) இஸ்ரேல் ராணுவம் காசா மீது திடீரென நடத்திய வான் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 10 மாதங்களில் இஸ்ரேல் - காசா இடையேயான போரில் இதுவரை 40 ஆயிரத்து 225 பேர் பலியானதாகவும், 92 ஆயிரத்து 981 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பேசும் தமிழன்
ஆக 22, 2024 09:01

ஒரு தீவிரவாதியும் தப்ப கூடாது.... அனைவரையும் மேலே அனுப்பி வையுங்கள்.... தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் இந்த பூமிக்கு பாரம் !!! அவர்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது.


ஜகன்நாத்
ஆக 21, 2024 22:14

அவிங்க ரெண்டுபேருக்கும் நடக்கும் சண்டையில் அவனவன் ஆயுதம், தளவாடம் வித்து சம்பாரிக்கறான். நாமளும் பூந்து விளையாடணும்.


JAYARAMAN
ஆக 21, 2024 21:09

அக்டோபர் ஏழில் ஹமாஸ் தீவிரவாத இயக்கம் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றதற்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் என்று இருக்க வேண்டும். குஜராத்தில் ட்ரெயின் எரித்து ஹிந்துக்கள் கொன்றது பற்றி பேசாதது போல இருக்கிறது.


ஆரூர் ரங்
ஆக 21, 2024 20:04

ஆயுதங்களை பள்ளி, கல்லூரி மருத்துவமனையில் ஜாக்கிரதையாக ஒளித்து வைத்து விட்டு மக்களை பாதுகாப்பின்றி நடுத்தெருவில் விட்டுள்ளது ஹமாஸ். அப்பாவிகள் இறப்புக்கு இஸ்ரேல் காரணமல்ல. இ‌ன்னு‌ம் உலகளாவிய ஒரே காலிபேட் இஸ்லாமிய நாடு அமையும் என முக்கால்வாசி முஸ்லிம்கள் நம்புவதைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை