உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி: 40 பேர் மாயம்

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி: 40 பேர் மாயம்

பீஜிங்: சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணிற்குள் புதைந்து 7 பேர் பலியாயினர். பலர் மாயமாகினர்.சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்சுய் என்ற கிராமத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த 47 பேர் மண்ணில் புதைந்தனர். தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் பலர் மண்ணில் புதைந்தனர். இதனால பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.கடந்த சில நாட்களாக இந்த நகரில் கடும் குளிருடன் மோசமான வானிலை நிலவி வந்தநிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி