உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிலா...நிலா ஓடிப் போ...!: பூமியை விட்டு விலகிச்செல்லும் நிலா: ஆய்வில் தகவல்

நிலா...நிலா ஓடிப் போ...!: பூமியை விட்டு விலகிச்செல்லும் நிலா: ஆய்வில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பூமியின் துணைக்கோளான நிலா, மெதுவாக விலகி செல்வதாகவும், இதனால் அடுத்த 20 கோடி ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கான்சின்- மடிசான் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நிலா குறித்து ஆய்வு செய்தனர். 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறையை அடிப்படையாக வைத்து நடந்த இந்த ஆய்வில், நிலாவானது பூமியை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு 3.8 செ.மீ., தூரம் நிலா நகர்ந்து வருகிறது. இதனால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இது நீடித்தால் அடுத்த 20 கோடி ஆண்டில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும். 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரமாக இருந்தது.பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான ஈர்ப்பு விசை இதற்கு காரணமாக உள்ளது. இதன் சக்திகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக நிலா விலகிச் செல்கிறது.இந்த ஆய்வில் ஈடுபட்ட பல்கலை பேராசிரியர் ஸ்டிபன் மியர்ஸ் கூறியதாவது: நிலா மெதுவாக விலகி செல்வதால் பூமியின் சுழலும் திறன் குறையும். நவீன புவியியல் செயல்முறைகள் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பான பழமையான பாறைகளை ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Godyes
ஆக 03, 2024 21:46

பூமியின் சுழலும் திறன் சூரியனால் கிடைப்பது.நிலாவினால் அல்ல. பூமியின் சுழற்சியால் அத்துடன் நிலவும் சேர்ந்து சுற்றுகிறது.


Godyes
ஆக 03, 2024 21:42

சூரிய வட்டத்தில் சுற்றும் பூமியை சுற்றும் நிலா மட்டும் விலகவில்லை. அத்துடன பூமியும் விலகி செல்கிறது.


Barakat Ali
ஆக 03, 2024 21:03

நிலவு விலகிச்செல்கிறது என்பது முப்பதாண்டுகளுக்கு முந்தைய கண்டுபிடிப்பு .... இப்போது ஒரேயடியாக விட்டு விலகி கண்காணாமலும் போய்விடாது என்கிறார்கள் ....


Swaminathan L
ஆக 03, 2024 18:27

வளர்ந்த நாடுகளின் அப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தால் அடுத்த நூறு ஆண்டுகளில் பூமிக்கே என்னென்ன பெருங்கேடுகள் நேருமோ என்று அவனவன் கவலைப்படும் நேரத்தில் இருபது கோடி ஆண்டுகளில்..என்று ஏதோ பயமுறுத்துகிறார்கள்.


HoneyBee
ஆக 03, 2024 18:18

இன்னும் நூறு நாட்களில் என்ன நடக்கும்... இதுவே தெரியாது... 20, கோடி ஆண்டுகள்.... ஹா...ஹா...ஹா...


R S BALA
ஆக 03, 2024 17:32

அதெல்லாம் அங்க வடைசுடும் ஆயா பாத்துக்கும் போயா


கோபால கிருஷ்ணன்
ஆக 03, 2024 16:48

அடிச்சி விடு....அடிச்சி விடு....20 கோடி ஆண்டுகளுக்கு பிறகு யார் இருக்க போரா....!!!


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை