உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்த அதிரடி! ஹெஸ்பொல்லா புதிய தலைவரும் காலி: இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்

அடுத்த அதிரடி! ஹெஸ்பொல்லா புதிய தலைவரும் காலி: இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா சமீபத்தில் கொல்லப்பட்ட நிலையில், நேற்று நடந்த மற்றொரு தாக்குதலில் அவரது வாரிசாகவும், அந்த அமைப்பின் அடுத்த தலைவராகவும் கருதப்பட்ட ஹசீம் சபீ அதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலின் காசா முனையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த ஆண்டு அக். 7ல் இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி தந்தது. கடந்த ஓராண்டாக இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஹமாசுக்கு ஆதரவாக களமிறங்கிய லெபனானின் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு அவர்கள் மீதான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. லெபனானின் பெய்ரூட்டில், கடந்த 28ம் தேதி ஹெஸ்பொல்லா அமைப்பினரின் தலைமையிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிகரித்துள்ள இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த தலைவர்கள், படை தளபதிகள் உட்பட 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிகாலை மீண்டும் குண்டு மழை பொழிந்தது. அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தின் பாதாள அறையில் அமைக்கப்பட்டிருந்த ஹெஸ்பொல்லாவின் உளவுப் பிரிவை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டுகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன. இதில், ஹசன் நஸ்ருல்லாவின் வாரிசாக கருதப்பட்ட ஹசீம் சபீ அதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நஸ்ரல்லா இறந்ததை அடுத்து, ஹெஸ்பொல்லா அமைப்பின் புதிய தலைவராக ஹசீம் சபீ அதீனும் அறிவிக்கப்பட்டார். அவர் கொல்லப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஹெஸ்பொல்லா அமைப்பினர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், ஹசீம் சபீ அதீன் செயல்பாடுகள் எதுவும் இல்லாததால், அவர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தாக்குதலில், ஹசீம் சபீ அதீனுடன், போர் தொடர்பாக ஆலோசனை நடத்திய ஈரானிய படைத் தளபதி இஸ்மாயில் கானி காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நஸ்ரல்லாவைத் தொடர்ந்து சபீ அதீனும் கொல்லப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வரும் இஸ்ரேல் வீரர்கள், 'ஹெஸ்பொல்லா அமைப்பில் தலைவர்களுக்கான தற்போதைய ஆயுட்காலம் மிகவும் சொற்பானது' என கேலி செய்து வருகின்றனர். அடுத்தடுத்து ஹெஸ்பொல்லா தலைவர்கள் மற்றும் போர் தளபதிகள் கொல்லப்பட்டு வருவது, ஹெஸ்பொல்லா அமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ் தலைவர்

குடும்பத்துடன் பலிலெபனானின் வடக்கு பகுதியில் உள்ள பெடாவி அகதிகள் முகாமில் இருக்கும் ஒரு குடியிருப்பின் மீது இஸ்ரேல் நேற்று காலை வான்வழி தாக்குதல் நடத்தியது. பாலஸ்தீன மக்கள் வசித்துவரும் இந்த முகாமில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவின் முக்கிய தளபதி சயது அதுல்லா அலி, தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது வீட்டை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த துல்லிய தாக்குதலில், சயது அதுல்லா அலி, மனைவி ஷியாமா அசீம், இரு மகள்கள் சைனப், பாத்திமா என குடும்பத்தினர் நான்கு பேரும் பலியாகினர். நேற்று முன்தினம் இரவு துவங்கி விடிய விடிய நடத்தப்பட்ட தாக்குதலில் லெபனானின் வடக்கு புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய கட்டடங்கள் சேதமடைந்தன. ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டன. இஸ்ரேலை நெருங்க ஹெஸ்பொல்லா பயன்படுத்திய சுரங்கப் பாதைகள், பாலங்களும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kumar Kumzi
அக் 06, 2024 10:30

உலக அமைதியை கெடுக்க நினைக்கும் மனித உருவில் நடமாடும் கற்கால மூர்க்க காட்டுமிராண்டிகளை அனைவரும் ஒன்றிணைந்து ஒழித்துக்கட்ட வேண்டும்


தமிழ்வேள்
அக் 06, 2024 09:48

இஸ்லாத்தை முன் மாதிரியாக கொண்டு கருப்பு கல் கட்டிடத்தை தரைமட்டம் ஆக்குதலும் இஸ்லாமிய மதவாதிகளை மனித அடிமைகளாக ஆக்கி அந்த மதத்தை கருவறுத்தலும் தவிர வேறு எந்த விதமான வழியும் இவர்களை வழிக்கு கொண்டு வராது... வன்முறை கொலை வன்புணர்வு தவிர வேறோன்றும் தெரியாத விலங்கு அனைய கூட்டம் இஸ்லாத் கும்பல்....


சுலைமான்
அக் 06, 2024 08:20

உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து தீவிரவாதிகளை துடைத்தொழிக்க வேண்டும்.


N.Purushothaman
அக் 06, 2024 07:19

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்கிற ஆபிரகாமிய மத கோட்பாட்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது ....இது ஆக்ரோஷத்தை மற்றும் பழி வாங்கும் எண்ணத்தை அதிகரிக்குமே தவிர ஒரு போதும் அமைதிக்கான தீர்வை எட்டாது ....இஸ்ரேல் தற்போது நட்பு நாடுகளின் ஆலோசனையோ அல்லது அறிவுரைகளையோ கூட கேக்க தாயாராக இல்லை என்பது அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது ....ஐ .நா உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலை உடனடி போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் .... யூதர்கள் மற்றும் பாலஸ்தீனிய மக்கள் இரு தரப்பிலும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் ...அதை மனதில் கொண்டு 1968 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை இரு தரப்பும் ஒப்பு கொள்ள அணைத்து வழிகளிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் ... இரண்டு முறை ஏற்பட்ட போரின் போது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளை அவர்களிடமே கொடுத்து இரு தரப்பும் சமாதானத்தை முன்னெடுக்க வேண்டும் ....இஸ்ரேல் தனது நாட்டின் எல்லையை பெரிதாக்கும் முயற்சியை கைவிட்டு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் ....


Ramesh
அக் 06, 2024 07:33

முஸ்லிம்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அராஜகம் தலை தூக்கி நிற்கும். இதை நீர் புரிந்து கொள்ளவில்லையென்றால் நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். பூனை தன கண்ணை மூடி கொண்டால் உலகம் இருந்து விடாது


Radhakrishnan Seetharaman
அக் 06, 2024 13:30

அருமை. இதை அப்படியே ஒரு கல்வெட்டில் பொறித்து அதை இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையில் வைத்துவிட்டு, பக்கத்திலேயே நீரும் உட்கார்ந்து கொள்ளும். நிச்சயம் தீர்வு பிறக்கும்.


N.Purushothaman
அக் 06, 2024 16:27

தம் கட்டி கருத்து எழுதின ரெண்டு பேரும் இஸ்ரேல் கடந்து வந்த பாதையை கொஞ்சம் நேரம் இருந்தால் தேடிப்பிடித்து படித்து பாருங்கள் .....அவர்களின் தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை இங்கு யாரும் விமர்சிக்கவில்லை ...ஆனால் 1960 களிலேயே அமேரிக்கா கண்ணில் மண்ணை தூவி அணுஆயுதத்தை ரகசியமாக செய்தவர்கள் ....அவர்களின் அணு உலைக்கு உதவி செய்த பிரான்ஸ் நாட்டையே இன்று தூக்கி எரிந்து பேசும் நிலைக்கு சென்று இருக்கிறார்கள் ...அமெரிக்கா பாதுகாப்புத்துறை செயலாளர் போர் நிறுத்த ஒப்பந்தத்த்தை இஸ்ரேலிடம் தெரிவித்த போது சரி என்ற கூறிய பெஞ்சமின் பிறகு நான் அப்படி கூறவேயில்லை எனவும் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறியது நேச நாடுகளையே அதிர்ச்சி அடைய செய்தது ... வரலாறு தெரியாம வந்து கம்பு சுத்தறதை நிறுத்திட்டு கொஞ்சம் எதார்த்த நிலைக்கு வாங்க ....தப்பு யார் செய்தாலும் அதை தப்பு தான் என ஒப்பு உள்ள கூடிய நேர்மை வேண்டும் ...


Kasimani Baskaran
அக் 06, 2024 07:15

பயங்கரவாதம் என்ற கோழைத்தனம் மனித குலத்துக்கே எதிரானது. அதை புரிந்து கொண்டு தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டவில்லை என்றால் உலக நாகரீகத்துக்கே பேராபத்து. ஆப்கானிஸ்தான் போல கற்காலத்துக்குத்தான் செல்ல வேண்டும்.


Rajan
அக் 06, 2024 06:28

ஒரு வருடமாக நடந்து வரும் சண்டையில் இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இனிமேலாவது மக்கள் பயங்கரவாதிகளை கண்டு பயப்படாமல் அவர்களை ஒடுக்க வேண்டும் இல்லையேல் அவர்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள்


நிக்கோல்தாம்சன்
அக் 06, 2024 04:45

இஸ்ரேல் செய்வது சரி என்றே தோன்றுகிறது , ஆக்கத்திற்கு பயன்படுத்தாமல் அழிவிற்கு பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதனை லெபனான் மக்கள் உணர்ந்திருப்பார்கள்


karupanasamy
அக் 06, 2024 03:08

நவீன உலகின் முதல் பயங்கரவாதி யாசர் அராத்து பத் உருவாக்கிய பயங்கரவாத கிருமிகளை மீண்டும் தோன்றாதவாறு அழிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை