உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிரவ் மோடி ஜாமீன் மனு லண்டன் கோர்ட் தள்ளுபடி

நிரவ் மோடி ஜாமீன் மனு லண்டன் கோர்ட் தள்ளுபடி

லண்டன்: ரூ. 12 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் கைதாகியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க லண்டன் கோர்ட் மறுத்தது.பிரபல வைரவியாபாரி நிரவ் மோடி ,50 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 12 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் 2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். இது தொடர்பாக நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறை வழக்கு பதிந்தது. 2019-ம் ஆண்டு லண்டனில் அந்நாட்டு போலீசாரால் நிரவ் மோடி கைது செய்யப்பட்டார்.வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அவரை நாடு கடத்தி கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஜாமின் வழங்க கோரி நிரவ் மோடி ஏப். 16-ம் தேதி ஐந்தாவது முறையாக மனு செய்தார். அம்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
மே 08, 2024 20:43

நீதிமன்றங்கள் இந்தியாவில்தான் நிதானம் என்றால், லண்டனிலும் நிதானம்தான் இப்படி நீதிமன்றங்கள் நிதானம் காட்டினால், குற்றவாளிகள் அதிகம் உருவாகுவார்கள் அவர்கள் கூடிய சீக்கிரம் தண்டிக்கப்படவேண்டும்


ஆரூர் ரங்
மே 08, 2024 11:55

நம்மை சுரண்டி கொள்ளையடித்த பிரிட்டிஷார் தன்னை போல் ஏமாற்றுக்காரர்களுக்கு. அடைக்கலம் தருவது புதிதில்லை. குத்ரோச்சி, ஆண்டர்சனை தப்பிக்க உதவிய காங்கிரஸ் தடை செய்யபட்டு விட்டதா என்ன?


Krishnan Santhanaraj
மே 08, 2024 11:20

Bank & Government yet to tell how much is swindled by these group, they might have completely wiped out the bank to donate electoral bond scheme


Sampath Kumar
மே 08, 2024 09:09

ஆக குஜு பாய்கள் எல்லாம் நல்ல கொள்ளை அடிக்க விட்டு நாட்டை விட்டு தப்பிக்க விட்டு போற இடத்திலும் ரகசிய பாதுகாத்து கொடுத்து ரட்சிக்கும் மகா பிரபு அய்யா இருக்கும் வரை இவர்களுக்கு ஒன்னும் ஆகாது இவர்களை மட்டுமுயர்த்தி பிடித்து இவர்களுக்கு கால் களவும் ஒரு அடிமை கூட்டமும் இங்கே சுற்றும் போகிறீர்கள் இவர்கள் எல்லாம் பசு தோல் போர்த்திய புலிகள் இந்த லக்கனத்தில் ஏந்த மூஞ்சியை வைத்து கொண்டு அடுத்தவனை திட்டுகிறார்கள் உங்களுக்கு எல்லாம் என்ன யோகிதை இருக்கு கலவனை பய கும்பல் அடித்து விரட்டப்படவேண்டிய கயவர்கள்


Krishnan Santhanaraj
மே 08, 2024 11:14

Even these people might have donated through electoral bonds


ஆரூர் ரங்
மே 08, 2024 11:51

இன அடிப்படையில் தாக்குதல் பகுத்தறிவோ? சிறை பயத்தில் அவர்கள் வெளிநாட்டில் ஒளிந்து கொண்டிருக்கலாம். ஆனால் பல லட்சம் கோடி ஆட்டையை போட்டும் நிதிக் குடும்பம் பயப்படாமல் இங்கேயே இருக்கிறது. எல்லாம் நீதிமான் கருணை .


Krishnan Santhanaraj
மே 08, 2024 08:22

years has gone, when our PNB money will be recovered


அப்புசாமி
மே 08, 2024 08:00

வெளியே வந்தா போட்டுத்தள்ளப்படும் அபாயம் உண்டு. உள்ளேயே சேஃபா வைத்திருங்கள்.


Kasimani Baskaran
மே 08, 2024 05:22

ஜாமீனை தள்ளுபடி செய்தாலும் இந்தியாவுக்கு அனுப்புவது சந்தேகமே பிரிட்டிஷ் நீதிமன்றம் ஆயிரம் முட்டுக்கட்டைகள் போடும் பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்த இந்திய அரசு பிரிட்டன் அரசிடம் ஒப்பந்தம் போட்டால் ஒரு வேளை இது போன்ற குப்பைகளை உ: மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்பிருக்கிறது


J.V. Iyer
மே 08, 2024 04:43

இப்படியே இவர் வாழ்நாளை கழித்துவிடுவார் பணம் எப்போது வட்டியுடன் திரும்பிவரும்?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி