உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிந்து நதி பூர்வீக சொத்து உரிமை கொண்டாடும் பாக்.,; இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

சிந்து நதி பூர்வீக சொத்து உரிமை கொண்டாடும் பாக்.,; இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிந்து நதி ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியதற்காக, இந்தியாவுக்கு துாதரக ரீதியில் முறையான நோட்டீஸ் அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.ஏப்., 22ல் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இந்தியா- - பாக்., இடையே, 1960ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 65 ஆண்டுகளுக்கு பின், இந்தியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.ஒப்பந்தத்தின் விதிகளின்படி, சிந்து மற்றும் கிளை நதிகளில் இருந்து இந்தியாவுக்கு 20 சதவீத நீர், பாகிஸ்தானுக்கு 80 சதவீத நீர் கிடைக்கிறது. இந்த தண்ணீரையே பாகிஸ்தான் முழுக்க, முழுக்க விவசாயம் மற்றும் நீர்மின் திட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகிறது.இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என பாகிஸ்தான் கொக்கரித்தது. இது தொடர்பாக, இந்தியாவுக்கு, துாதகரக ரீதியிலான முறையான நோட்டீஸ் அனுப்ப பாக்., திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு, சட்டம் மற்றும் நீர்வள அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைக்குப் பின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள், காட்சி ஊடக ஆதாரங்களை மேற்கோள் காட்டி நோட்டீஸ் அனுப்ப உள்ளது. சிந்து நதி மீது எங்களுக்கு நீண்ட காலமாக உரிமை உள்ளது. இதை இந்தியாவால் நிறுத்த முடியாது என, பாக்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்போது, மத்தியஸ்தம் வகித்த உலக வங்கிக்கும் பாகிஸ்தான் தரப்பில், முழு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை பாக்., வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ மேற்கொண்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

A Duraisamy
மே 04, 2025 18:46

முன்னறிவிப்பு இல்லாமல் பாகிஸ்தானை தாக்கி அழிக்க்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு கால அவகாசம் சரியாக படவில்லை.


Dharmavaan
மே 03, 2025 17:13

இதற்கு மூல காரணம் ஹிந்து துரோகிகள் ..


ram
மே 03, 2025 12:37

அப்ப இந்தியாவை ஹிந்துக்கள் நாடு என்று அறிவித்து இங்கு இருக்கும் முஸ்லிம்களை அங்கு அனுப்பி விடலாம்.


Palanisamy T
மே 03, 2025 12:16

இவர்கள் நாளையே இந்தியாவையும் தங்களின் பூர்வீக சொத்துரிமையாகக் கொண்டாடினாலும் வியப்பில்லை. நதிநீர் விவகாரம் உணர்ச்சிப் பூர்வமான விவகாரம். நாளை இந்திய நாட்டின் கைகளையும் மீறி இதில் மூன்றாம் தரப்பு தலையிட வாய்ப்புள்ளது. அதை தவிர்ப்பது நல்லது . கொஞ்ச நாட்களுக்குமுன் பாகிஸ்தான் ராணுவ தளபதி தன் பிபிசி. பேட்டியில் காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானுக்கு சொந்தமென்று குறிப்பிட்டதும் இந்தப் பாடம் பாகிஸ்தான் பள்ளிகளில் இன்றும் ஆரம்பத்திலிருந்தே போதிக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளார். இது உண்மையில்லை. அன்று இந்திய துணைக்கண்டத்தில் இவர்கள் வன்முறையாக படையெடுத்து வந்து குடியேறியவர்கள் என்பதை இவர்கள் இன்று மறந்து விட்டார்கள் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இவர்களெல்லாம் நாடில்லாத நாடோடிகளாய் மத்திய ஆசியாவில் வாழ்ந்தவர்கள். இதுதான் வரலாறு . இப்படி உண்மையை மறைத்து போலியான வரலாற்றுப் பாடத்தை வைத்து காஷ்மீர் தங்களுக்கு சொந்த மென்பதை இன்றும் இவர்கள் பாகிஸ்தான் ஆரம்பப் பள்ளிப்பாடத்தில் போதிக்கப்படுகின்றதாக தெரிவித்தார். அந்த அளவிற்கு மோசமானவர்கள் இவர்கள். இந்திய நாடு இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.


GMM
மே 03, 2025 07:35

தற்போதய பாகிஸ்தான் இந்துக்களின் பூர்வீக சொத்து. இனி பாகிஸ்தான், பங்க தேஷ் இந்துக்களுக்கு வாடகை செலுத்த வேண்டும்.


GMM
மே 03, 2025 07:31

பாகிஸ்தான் பூர்வீக சொத்து உரிமை இன்என்று மட்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 03, 2025 07:31

தனி நாடு வேண்டும் என்று கேட்டு, அதை சட்டபூர்வமாக பெற்றுக்கொண்ட பின்னரும் அங்கு போகாமல் இங்கேயே இருப்பவர்களின் வாரிசு உட்பட அனைவரையும் கழுத்தை பிடித்து வெளியேற்ற முடிவு செய்தால் நிலைமை என்ன ஆகும்?


Barathan
மே 03, 2025 07:08

பாகிஸ்தான் இந்தியாவுக்கு சொந்தம் என்று நாம கெளம்பினா?


Kasimani Baskaran
மே 03, 2025 06:30

20% இந்தியாவுக்கு என்று ஸ்மார்ட்டான ஒப்பந்தம் போட்டது அறிஞர் நேரு மகான். நல்லா வெளங்கும்


N thirumalsi
மே 03, 2025 06:29

பாக்கிஸ்தான் என்ற நாடு முசுலீம்களுக்கு என்று பிரித்து கொடுக்க முஸ்லீம் லீக் கட்சுக்கு வோட்டு போட்டு ஆதரித்த அனைவரும் சென்றனரா நமது மாநிலத்தில் ஊடுரு சட்டவிரோதமாக தங்கி இருபவர்களை வெளியேற்றா என்னசெய்கிறது


சமீபத்திய செய்தி