உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எனக்கில்லை நோபல் பரிசு; புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் தந்தது பாக்.,

எனக்கில்லை நோபல் பரிசு; புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் தந்தது பாக்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: திருவிளையாடல் படத்தில் வரும் தருமியைப்போல், 'எனக்கில்லை நோபல் பரிசு' என்று புலம்பிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அவரது பெயரை பரிந்துரை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பஹல்காம் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நிலைகள் மீதும், பயங்கரவாதிகள் மீதும் இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற இந்நடவடிக்கையால் இருநாடுகள் இடையே போர் மூளலாம் என்ற நிலைமை தோன்றியது.போர் பதற்றச் சூழலுக்கு மத்தியில் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவை எடுத்தன. ஆனால், அமெரிக்காவின் முயற்சியால் தான் போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியானதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார். இதை இந்தியா முற்றிலும் மறுத்து விட்டது.இந் நிலையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலை தீர்க்க உதவியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் கூறி உள்ளது.இந்தியா, பாகிஸ்தான் மோதலை ராஜதந்திரமான தலையீடு மற்றும் தலைமைத்துவம் மூலம் டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கண்ணியமான முறையில் சமாதானத்தை நிலைநாட்டியவர் என்ற அடிப்படையில் இந்த பரிந்துரையை மேற்கொள்வதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. காசா இனப்படுகொலை, ஈரான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிவு போன்றவற்றுக்கு டிரம்ப் அளித்த ஆதரவை மேற்கோள் காட்டி இந்த விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் அமைதிக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கப் போவதில்லை என்று டிரம்ப் வெளிப்படையாக சமூக வலைதளத்தில் புலம்பி இருந்தார். திருவிளையாடல் படத்தில் வரும் தருமியைப் போல், 'எனக்கில்லை, எனக்கில்லை' என்ற அவரது புலம்பல், நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அப்படி புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தாங்கள் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
ஜூன் 22, 2025 00:15

தலைக்கு ஒரு நோபல் பார்சல் ப்ளீஸ்.


theruvasagan
ஜூன் 21, 2025 22:02

ட்ரம்ப் எங்ககிட்ட கேட்டிருக்கணும். முட்டு சந்து ஆபிசிலிருந்து ஒருத்தருக்கு யுனஸ்கோ அவார்ட் கிடைச்சமாதிரி முட்டுசந்து நோபல் பரிசுக்கும் ஏற்பாடு பண்ணி குடுத்துருக்கும்.


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 21:03

வயதாகிவிட்டது. ஒவ்வொரு பல்லா தானா விழுந்து கடைசியில நோ பல் கிடைக்கும்.


Sudha
ஜூன் 21, 2025 20:54

ராகுல் காந்தியும் சிபாரிசு செய்யலாம்


SUBBU,MADURAI
ஜூன் 21, 2025 20:38

நேபாள், மாலத்தீவு, இலங்கை, பப்புவா நியூகினி உட்பட வேறு எந்த சிறிய நாடுகளாவது ட்ரம்பிற்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்தாலாவது பரிசீலனை செய்ய வாய்ப்பு இருக்கிறது ஆனால் கழுதைகளையும், தீவிரவாதிகளையும், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்க பரிந்துரை செய்ததால் அதை பரிசீலனை செய்யும் நோபல் கமிட்டி இந்த வருடத்தில் இருந்து நோபல் பரிசு நிறுத்தப் படுகிறது அதை யாருக்கும் கொடுக்கப் போவதில்லை என்று அறிவித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.


Ramesh Sargam
ஜூன் 21, 2025 20:24

பாகிஸ்தான் பரிந்துரைப்பதால், டிரம்புக்கு பரிசு கிடைக்கும் வாய்ப்பும் கைநழுவி போகிறது. உலகெங்கிலும் தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்யும் பாக்கிஸ்தான் பரிந்துரையை நோபல் பரிசு குழுமம் ஏற்குமா???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை