உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரிஸ் ஒலிம்பிக்கில் சொல்லி அடிக்கும் கில்லிகள்; சம்பாத்தியத்தில் எந்த வீரர் டாப்; இதோ பட்டியல்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் சொல்லி அடிக்கும் கில்லிகள்; சம்பாத்தியத்தில் எந்த வீரர் டாப்; இதோ பட்டியல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் பலர் கோடீஸ்வரர்கள்; தினமும் சில கோடி ரூபாய் சம்பாத்தியம் பார்ப்பவர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நடக்கும். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 117 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

போர்ப்ஸ்

இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர்களில், கடந்த ஓராண்டில்,போட்டிகள், விளம்பரங்கள் மூலம் எந்தெந்த வீரர்கள் அதிகம் பணம் சம்பாதித்தனர் என்ற தகவல்களை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆண்கள் கோல்ப்

* ஸ்பெயின் வீரர் ஜான் ரஹ்ம். இவர் வயது 29. 1830 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். * வடக்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ரோரி டேனியல் மெக்ல்ராய். இவர் வயது 35. 696 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.* அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்காட்டி ஷெப்லர். இவர் வயது 28. 512 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

பெண்கள் கோல்ப்

* அமெரிக்காவை சேர்ந்தவர் நெல்லி கொர்டா. இவர் வயது 26. 68 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.* கனடாவை சேர்ந்தவர் புரூக் மெக்கென்சி ஹெண்டர்சன். இவர் வயது 26. 45 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.* தென் கொரியாவை சேர்ந்தவர் ஜின் யங் கோ. இவர் வயது 29. 42 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

ஆண்கள் டென்னிஸ்

* செர்பியா நாட்டை சேர்ந்தவர் நோவக் ஜோகோவிச். இவர் வயது 37. 322 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.* ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் கார்லோஸ் அல்காரஸ். இவர் வயது 21. 263 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.* ரஷ்யாவை சேர்ந்தவர் டேனில் மெட்விடேவ். இவர் வயது 28. 168 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

பெண்கள் டென்னிஸ்

* போலந்து நாட்டை சேர்ந்தவர் இகா ஸ்வியாடெக். இவர் வயது 23. 192 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.* அமெரிக்காவை சேர்ந்தவர் கோகோ கவுப். இவர் வயது 20. 182 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.* ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் நவோமி ஒசாகா. இவர் வயது 26. 125 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

ஆண்கள் கூடைப்பந்து

* அமெரிக்காவை சேர்ந்தவர் லெப்ரான் ஜேம்ஸ். இவர் வயது 39. 1081 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.* கிரீஸ் நாட்டை சேர்ந்தவர் கியானிஸ் ஆன்டிடோகவுன்போ. இவர் வயது 29. 931 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். * அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் கரி. இவர் வயது 36. 856 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natarajan Ramanathan
ஆக 10, 2024 03:04

பல ஆப்பிரிக்க, தென் அமெரிக்க மற்றும் இஸ்லாமிய நாட்டு வீரர்கள் தங்கள் சம்பாதிப்பதை உயிர் பயம் காரணமாக வெளியே சொல்வதில்லை....


Ramesh Sargam
ஆக 09, 2024 21:16

இந்தியாவில் கூட ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுபெற்றபின்பும் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை