உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: இந்திய பயணத்தை நினைவு கூர்ந்த ரஷ்ய அதிபர் புடின், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மையை பாராட்டி கருத்து தெரிவித்து உள்ளார்.அண்மையில், ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தி இருந்தார். இந்த சூழலில் தனது இந்திய பயணத்தை நினைவு கூர்ந்து ரஷ்ய அதிபர் கூறியதாவது: நான் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தேன். 150 கோடி மக்கள் அங்கு வசிக்கிறார்கள். அனைவரும் இந்தி பேசுவதில்லை. 50 கோடி பேர் மட்டும் ஹிந்தி பேசுகிறார்கள்.மீதமுள்ளவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பது நாம் பாதுகாக்க வேண்டிய ஒன்று. இந்தியாவின் கலாசாரம் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு இந்திய வருகை குறித்து புடின் பேசி உள்ளார். பிரதமர் மோடி உடனான விரிவான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புடின் பாராட்டி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பாலாஜி
டிச 10, 2025 17:18

இந்தியாவை பெட்ரோலிய வியாபாரம் ரஷ்யாவுடன் தொடர்ந்து செய்யவைப்பதற்காக புடின் இந்தியாவுக்கு ஐஸ் வைத்து அறிக்கை விடுகிறார்.


Priyan Vadanad
டிச 10, 2025 17:09

ஒரு குறிப்பிட்ட கட்சியின் உள்நோக்கம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் சொல்லப்பட்ட ஒரு உயிரூசலில் தத்தளிக்கும் உண்மை.


KRISHNAN R
டிச 10, 2025 16:34

உக்ரைன் போர் கொஞ்சம் நிறுத்துங்க சார்


Suresh
டிச 10, 2025 15:30

தமிழ்மொழியை வைத்து தமிழ்தேசியம் என்றும் சீக்கியம் மதத்தை வைத்து காலிஸ்தான் என்றும் பிரிவினைவாதம் பேசுவது போல ரஷ்யாவிலும் உக்ரைன் மொழியை வைத்து தனிநாடு பிரிந்தது. மதத்தை வைத்து உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், கஜகிஸ்தான், ஆர்மீனியா, ஜார்ஜியா, அசர்பைஜான், பெலாரஸ், லிதுவானியா, எஸ்டோனியா என 13 தனிநாடுகள் பிரிந்தன. அதுபோல இந்தியாவில் நடக்காது என சொல்கிரார் ரஷ்ய அதிபர்.


Skywalker
டிச 10, 2025 17:47

Stop spamming false information and read history, Ukraine is older than russian itself, the word russia originates from the name of the ancient settlement kieven rus, which is present day kiev , capital of Ukraine


S.F. Nadar
டிச 10, 2025 15:23

வேற்றுமையிலும் ஒற்றுமை தான் ,


V Venkatachalam, Chennai-87
டிச 10, 2025 14:48

கனியக்காவுக்கு 2ஜி புகழை விட இது அதிகமான புகழை சேர்க்கும்.


Ajrjunan
டிச 10, 2025 15:10

புட்டினுக்கு புரிந்த அளவுக்குக்கூட வென்கட்கு புரியல.


Naga Subramanian
டிச 10, 2025 14:33

இது புட்டினுக்கு புரிகிறது. ஆனால் வாக்குக்காக சிலர், ஒற்றுமையில் வேற்றுமை கண்டு களிக்க விரும்பிகின்றனரே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை