உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய அதிபர் புடின் இன்று வருகை; டில்லியில் பலத்த பாதுகாப்பு

ரஷ்ய அதிபர் புடின் இன்று வருகை; டில்லியில் பலத்த பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடின் இன்று (டிசம்பர் 04) டில்லி வருவதை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது போர் துவங்குவதற்கு முன், 2021 டிசம்பரில் இந்தியா வந்தார். அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து இன்று டிசம்பர் நான்காம் தேதி டில்லி வருகிறார். இரு நாள் பயணமாக இந்தியா வரும் அவர், டில்லியில் நடக்க உள்ள, 23வது இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் பங்கேற்க உள்ளார்.'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது ரஷ்யாவின் எஸ் - 400 வான் பாதுகாப்பு கவசம் முக்கிய பங்காற்றியது. இந்த சூழலில், இன்று ரஷ்ய அதிபர் இந்தியா வருகிறார். அவரது வருகை முன்னிட்டு இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.புடின் வருகையை முன்னிட்டு டில்லி விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ரஷ்ய அதிபர் புடினை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை