உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பரஸ்பரம் பாதுகாப்பு அளிப்போம்: சவுதி - பாக்., இடையே ஒப்பந்தம்

பரஸ்பரம் பாதுகாப்பு அளிப்போம்: சவுதி - பாக்., இடையே ஒப்பந்தம்

ரியாத்: மற்ற நாடுகள் தாக்குதல் நடத்தினால், பரஸ்பரம் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டுக்குச் சென்று உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w7gzzxv7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒப்பந்தம் அந்நாட்டு தலை நகர் ரியாத்தில் உள்ள அல் யமாமா அரண்மனையில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்தனர். இருவரும் இருநாடுகளுக்கு இடையேயான வரலாற்று உறவுகள், பொதுவான மற்றும் தற்போதைய புவி சார் அரசியல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சவுதிக்கும், பாகிஸ்தானும் இடையேயான கடந்த 80 ஆண்டுகால வரலாற்று நட்புறவை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், மற்றொரு நாடு தாக்குதல் நடத்தினால், பரஸ்பரம் பாதுகாப்பு ஒத்துழைப்பை, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா வழங்கும். தாக்குதல் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா நடத்திய பதில் தாக்குதலான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மேற்காசிய நாடான கத்தார் மீது பயங்கரவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதுபோ ன்ற சூழ்நிலை ஏற்பட்டால், பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் பரஸ்பரம் பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கும் வகையில், இந்த ஒப்பந்தம் கையெ ழுத்தாகியுள்ளது.

நிலைமையை கண்காணிப்பதாக

மத்திய அரசு அறிவிப்பு

இந்த ஒப்பந்தம் குறித்து, நம் வெளியுறவுத் துறை கூறியுள்ளதாவது: சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையேயான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்த செய்தியை கண்டோம். இந்த இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால ஒப்பந்தத்தை முறைப்படுத்துவதன் முன்னேற்றமே இந்த ஒப்பந்தம் என்பதை நம் அரசு அறிந்து கொண்டுள்ளது. நம் தேசிய பாதுகாப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு இந்த ஒப்பந்தத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்வோம். தேசிய நலன்களை பாதுகாப்பதிலும், அனைத்து துறைகளிலும் விரிவான பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை