உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சத்தியமா சொல்றோம்; ஹசீனா குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா

சத்தியமா சொல்றோம்; ஹசீனா குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்ததாக, ஷேக் ஹசீனா கூறிய குற்றச்சாட்டை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் மறுத்துள்ளார்.வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ‛வங்கதேசத்தில் இருந்து நான் வெளியேறுவதற்கு அமெரிக்கா காரணம்' என அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியிருந்தார்.

வன்முறை

இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: எங்களுக்கும், வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தான் காரணம் என சொல்வது முற்றிலும் பொய். அரசின் எதிர்காலத்தை வங்கதேச மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அடக்குமுறை

ஹசீனா அரசு எடுத்த கடுமையான அடக்குமுறை நடவடிக்கைதான், போராட்டத்தை தீவிரப்படுத்தியது. ஷேக் ஹசீனா அரசு மாணவர்களை கடுமையாக ஒடுக்கியது. வங்கதேசத்தில் ஹிந்துகள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க இடைக்கால அரசு எடுக்கும் முயற்சிகளை உன்னிப்பாக கவனிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gokul Krishnan
ஆக 14, 2024 09:19

இடைக்கால அரசு பதவி ஏற்பு விழாவில் உங்கள் நாட்டு தூதர் மட்டும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் போதே எல்லோர்க்கும் புரியும் உன் அப்பன் குதிருக்குள் இல்லை என்று


Barakat Ali
ஆக 13, 2024 12:00

திருடன் திருட்டை ஒப்புக்கொள்வான் என்று எதிர்பார்க்கலாமா ????


M Ramachandran
ஆக 13, 2024 10:34

உஙக ட்ராமாவை சிறு பிள்ளை கூட நம்பாது


நிக்கோல்தாம்சன்
ஆக 13, 2024 10:15

க்ரீன் ஜீன் பீர் உன்னைபோலவே சொல்லிக்கொண்டு திரியும் க்ரிப்ட்டோக்களை நாங்க ரொம்ப நாளா பார்த்துக்கொண்டுள்ளோம், சொந்த லாபத்திற்காக ஒரு நாட்டினை சூறையாடும் அமெரிக்கர்களின் கொட்டம் என்று தான் அடங்குமோ? அங்கிருக்கும் இந்து பெண்களை எந்த காரணமும் இல்லாமல் கற்பழிக்க ஒரு வாய்ப்பை அமைத்து கொடுத்த ஆட்களின் மீது இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏனோ? இஸ்ரேல், ரஷிய படைகள் தாக்குதல் நடத்துகின்றன ஆனால் கற்பழிப்புகளில் ஈடுபவதில்லை, ஏனோ அமெரிக்க, இஸ்லாமிய படைகள் தாக்கினால் மட்டும பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது தான் சகிக்க வில்லை


sankaranarayanan
ஆக 13, 2024 09:24

இதுவரைக்கும் ஆரம்பத்திலிருந்து அங்கே நடக்கும் கலவரத்திற்கு ஒரு அனுதாபம் கூட இவர்கள் தெரிவிக்கவில்லையே ஏன் அரசிற்கு ஆதரவாக ஒரு செய்திகூட வெளிவரவில்லையே


Ramesh
ஆக 13, 2024 08:57

ஆமா அது உண்மை என்றா சொல்ல போகிறார்கள். போம்மா அங்கிட்டு ஆப்பிரிக்காவிலிருந்து வந்து நாலு வார்த்தை ஆங்கிலத்தில் கத்துகிட்டு சொந்த இனத்துக்கே துரோகம் செய்யுற நு சொல்றியா?


R.Varadarajan
ஆக 13, 2024 08:00

பெரியண்ணன் யாரையும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் அது தான் அவர்களுடைய மனித நேயம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி