உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: போர்க்களமாக மாறிய அமெரிக்க பல்கலை

இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: போர்க்களமாக மாறிய அமெரிக்க பல்கலை

வாஷிங்டன்: காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அந்த பகுதி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. இதுவரை தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 550 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில், இஸ்ரேலை கண்டித்து மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இருப்பினும் பல்கலையின் விருப்பப்படி, கண்ணீர் புகை குண்டு மற்றும் ஆயுதங்களுடன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக அப்பல்கலை ஊழியர் ஒருவர் கூறுகையில், போலீசார் வந்ததும் போராட்டக்காரர்களை வெளியேறும்படி கூறினர். அது போர்க்களம் போல் காட்சி அளித்தது. ஆயுதங்களையும், ரப்பர் புல்லட்களையும் போலீசார் கொண்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்தனர் என்றார்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், காசாவில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டம் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆயுதம் வாங்க உதவும் வகையில் அந்நாட்டில் முதலீடு செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்றார்.இதேபோல் பல பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் நடக்கிறது. போராட்டக்காரர்கள் அமைத்துள்ள கூடாரங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஏப் 28, 2024 22:12

இப்பொழுது அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்திருக்கவேண்டும் மற்ற நாடுகளின் விஷயத்தில் மூக்கை நுழைப்பது சரியா, தவறா என்று எங்கோ போர் ஆனால் பாதிக்கப்படுவது யார்?


Indian-இந்தியன்
ஏப் 28, 2024 19:42

கல்கி அவதாரத்திற்க்கான நேரம் நெருங்கியது


பேசும் தமிழன்
ஏப் 28, 2024 19:14

அமெரிக்கா இப்போது தான் அனுபவிக்க ஆரம்பித்து இருக்கிறது ....கண்டமேனிக்கு எல்லோரையும் நாட்டிற்க்கு உள்ளே விட்டால்......இப்படி தான் அனுபவிக்க நேரிடும்.


Mohan
ஏப் 28, 2024 15:53

இது எல்லாவற்றிற்கும்காரணம் மிக அதிக அளவு பணம் படைத்த அமெரிக்க மாணவர்களின் ""இடதுசாரியாக காட்டிக்கொள்ளும் ஃபேஷன்""


Kasimani Baskaran
ஏப் 28, 2024 15:19

தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரானது தவிரவும் தீவிரவாதிகளை பாலஸ்தீனர்களே பிடித்து உதைத்தால் தவிர இந்தப்பிரச்சினை தீரப்போவது இல்லை


A1Suresh
ஏப் 28, 2024 13:29

ஜார்ஜ் சோரஸ் பணம் பத்தும் செய்யும்


ganapathy
ஏப் 28, 2024 13:00

அளவுக்கு மீறிய மாணவ சுதந்திர போக்கின் சீரழிவு இது


ஆரூர் ரங்
ஏப் 28, 2024 12:46

அளவுக்கு மீறிய (பொறுப்பற்ற) ஜனநாயகம் எந்த நாட்டுக்கும் ஆபத்தே.


கிருஷ்ணதாஸ்
ஏப் 28, 2024 12:33

தீவிரவாத ஆதரவுப் பிரச்சாரம் அமெரிக்காவிலும் வெற்றி பெறுவது கவலையளிக்கிறது!


K.Muthuraj
ஏப் 28, 2024 13:07

சில நாடுகள் இதனை மிகக் கடுமையாக ஒடுக்கி விட்டனர் உதாரணம் சவூதி, யு ஏ இ, கஜக் போன்றவை சில நாடுகள் தூண்டி விடுகின்றன பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்றவை இதில் அடங்கும் மக்களாட்சி மற்றும் கருத்து சுதந்திரம் உள்ள நாடுகளில் மட்டுமே இவ்வாறான பிரச்சாரங்கள் அதிகம் அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் இந்தியா ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதில் அடங்கும் சீனா ஜப்பான் சிங்கப்பூர் தைவான் நாடுகளில் இவர்கள் வாய்திறக்க முடியாது இது எங்கு சென்று முடியும் தெரியவில்லை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ