உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தற்கொலை படை தாக்குதல்: ராணுவ வீரர் 7 பேர் பலி

பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தற்கொலை படை தாக்குதல்: ராணுவ வீரர் 7 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும், பணமும் கொடுத்து ஆதரிக்கும் பாகிஸ்தான், அதன் மோசமான பின்விளைவுகளை இப்பொழுது எதிர்கொள்வதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது இரு நாடுகளும் 48 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

suresh Sridharan
அக் 18, 2025 09:52

அவன் விதைத்த விதை இன்று ஆள விருட்சம் ஆகிவிட்டது


Parivel
அக் 18, 2025 06:12

சவூதி அரேபியா தெஹ்ரிக் ஈ தாலிபானை தாக்கும்? ஒப்பந்தம் போட்டாங்களே???? இரண்டு வாரம் திருமணம் செய்து ஆசை தீர்ந்தவூடன் எச்சை இலையை போல பெண்களை தலாக் தலாக் தலாக் செய்யும் பணக்காரனுக்கும் பிச்சைகார ஏழைக்கும் ஒப்பந்தம் எப்படிடா சரிவரும்........முட்டாப்பசங்களா.....அரேபிய அடிமை சாசனத்தை விட்டு வெளியே வாருங்கள்.....


Pandi Muni
அக் 18, 2025 11:42

அய்யோ அய்யோ


Kasimani Baskaran
அக் 18, 2025 05:22

இராணுவ தீவிரவாதிகளுக்கும் புரட்சியாளர்களுக்கு தகராறு. மற்றப்படி பாகிஸ்தானில் சீருடை அணிந்த தீவிரவாதிகளுக்கும் சீருடை அணியாத தீவிரவாதிகளுக்கும் உறவு சிறப்பாகவே இருக்கிறது.


Prasath
அக் 18, 2025 04:11

பாஸ் சவூதி பாகிஸ்தானை எப்பவும் ஒரு எடுபுடியா தான் பார்த்தது. பாதுகாப்பு ஒப்பந்தம் எல்லாம் சும்மா ஒரு ரைமிங்கா சொல்லுவது அவ்வளவுதான். பாகிஸ்தான் இனி அதோகதி அதன் பொருளாதாரம் பிச்சைக்காரனோட நிலை, ஒரு பக்கம் பலுசிஸ்தான் பாகிஸ்தான் ராணுவத்தை பின்னி பெடலெடுக்குது, பிஓகேவில் ஓட விட்டு போட்டு தள்ளுது, கைபர் பக்துன்வாவில் ராணுவம் அலறுது, சிந்து மாகாணம் இந்தியா தண்ணீர் நிறுத்தியதால் பஞ்சமாகி கலவரம் ஆரம்ப கட்டத்தில் இருக்கு இப்போ அண்டை நாடான ஆப்கானிஸ்தான் இவங்களை ஆப்பு அடிக்குது, ஈரானுக்கும் இவங்களோட ஏழாம் பொருத்தம். இந்த பக்கம் ஒரே சேம்பில் கொடுத்த ஆபரேஷன் சிந்தூர் இந்தியா. கர்மா வேலை செய்ய ஆரமிச்சிடுச்சி பாக்கிஸ்தான் மூன்று அல்லது நான்கு துண்டாகும் நாள் வெகு அருகில்.


karupanasamy
அக் 18, 2025 00:53

அழியட்டும் இது இறைவனின் கட்டளை.


திகழ்ந் ஓவியன், Ajax Ontario
அக் 17, 2025 23:34

யாரோ சவுதிக்கு போய் வரலாற்று பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டுட்டு வந்தார்? அப்போ இந்த போருக்கும் சவுதிக்கும் அந்த ஒப்பந்தத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையா? வெறும் பூச்சாண்டி போல....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை