உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: கம்போடியா மீது தாய்லாந்து ராணுவம் தாக்குதல்

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: கம்போடியா மீது தாய்லாந்து ராணுவம் தாக்குதல்

பாங்காக் : போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கம்போடியா மற்றும் தாய்லாந்து ராணுவத்தினர், ஒருவர் மீது இன்னொருவர் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள கோவில்கள் யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ளது.அவ்வப்போது இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொள்வது வழக்கம். கடந்த ஜூலை மாதம் இருநாட்டு ராணுவத்தினரும் முழுவீச்சில் போர் நடத்தினர். இதில் இரு தரப்பிலும் சேர்ந்து 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சர்வதேச நாடுகள் முன்னின்று நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. எனினும் அவ்வப்போது எல்லையில் சிறு சிறு மோதல்கள் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. நேற்று கம்போடியா ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தாய்லாந்து ராணுவத்தைச் சேர்ந்த வீரர் கொல்லப்பட்டார். ஏராளமானோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு பதில் தாக்குதல் நடத்த தாய்லாந்து ராணுவம் உத்திரவிட்டது. அதன்படி கம்போடியா ராணுவத்தினர் மீது தாய்லாந்து நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தாங்கள் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்றும் கம்போடியா ராணுவம் தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோர் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு மாறாக தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது என்று கம்போடியா தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை