உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா உடன் உறவு புத்துயிர் பெறுகிறது: டிரம்புக்கு புடின் பாராட்டு

அமெரிக்கா உடன் உறவு புத்துயிர் பெறுகிறது: டிரம்புக்கு புடின் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா உடனான ரஷ்யாவின் உறவுகள் மீண்டும் புத்துயிர் பெறுகிறது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார். இது குறித்து, அணுசக்தித்துறை ஊழியர்களுடனான சந்திப்பின் போது ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: இறையாண்மையை மதிக்காமல் சில நாடுகள் இருந்து வருகின்றன. இன்று ஐரோப்பா இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. இது குறித்து சொல்லும் பல நாடுகள் உள்ளன. இது ரஷ்யாவிற்கு ஏற்றதல்ல. ரஷ்யா இறையாண்மையை இழந்தால், அது தற்போதைய உள்ள நிலையில் இருக்க முடியாது.உக்ரைன் மோதல், நேட்டோ அமைப்பு விரிவாக்கம் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் போன்ற பிரச்னைகளால் அமெ ரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமெரிக்கா உடனான ரஷ்யாவின் உறவுகள் தற்போது மீண்டும் புத்துயிர் பெறுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுரங்கப்பாதை முடிவில் வெளிச்சம் இருப்பது போன்ற சூழல் உருவாகி உள்ளது. இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஆக 23, 2025 14:17

யார் யார் காலை வாரப் போறாங்களோ தெரியலையே.. ஆனா எந்த உறவும், பகையும் ரொம்பநாள் நீடிக்காது


Tamilan
ஆக 23, 2025 12:40

இந்தியாவுடன் நட்பு தேய்கிறது


naga
ஆக 23, 2025 11:19

ஒரு காலத்தில் கோர்ப்பசேவை நம்ம வைத்து ரஷ்யாவை பல துண்டுகளாக உடைத்த அமெரிக்காவை அதே பாணியில் துண்டுகளாக உடைத்தால் 25 சதவீத வரி, 50 சதவீத வரி திமிரு எல்லாம் அடங்கும்.


Barakat Ali
ஆக 23, 2025 11:12

எதிர்காலத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் சேர்ந்து சீனாவுடன் யுத்தம் செய்யும் .... சீனா நாசமாகும் என நாஸ்ட்ரடமஸ் குறிப்பிட்டதாகப் பல வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது ....


K.Ravi Chandran, Pudukkottai
ஆக 23, 2025 10:26

இந்த வஞ்சப் புகழ்ச்சிதான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொல்லும் டிரம்பரை சமாளிக்கும் ஐடியா போலும்.


சமீபத்திய செய்தி