உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போயிங் விமானங்களை வாங்க சீனா தடை

போயிங் விமானங்களை வாங்க சீனா தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: அமெரிக்கா உடன் வர்த்தக போர் முற்றி உள்ள நிலையில், அந்நாட்டிடம் இருந்து போயிங் விமானங்களை வாங்க வேண்டாம் என தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்து உள்ளது.அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரியை உயர்த்தி உத்தரவிட்டார். குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குதி செய்யப்படும் https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i1qkcqej&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொருட்களுக்கு, 145 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்த மிரட்டலுக்கு அடிபணியாத சீனா, அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.அனைத்து நாடுகளின் மீது பிறப்பிக்கப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அமெரிக்கா, சீனா மீதான வரி விதிப்பை மட்டும் அமல்படுத்தியுள்ளது. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரிப் போரை அதிகரித்துள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் போயிங் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்க வேண்டாம் என, தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து விமானம் தொடர்பான சாதனங்கள் மற்றும் கருவிகளை வாங்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
ஏப் 16, 2025 04:07

சீன விமானங்களை நம்ப சீனா உட்பட யாரும் தயாரில்லை. ஆக சீன விமான நிறுவனங்கள் திவாலாகப்போகிறது என்று சொல்லலாம்..


நிக்கோல்தாம்சன்
ஏப் 15, 2025 21:53

அப்போ airbus?


ஆரூர் ரங்
ஏப் 15, 2025 18:11

ரெண்டும் உலகத்துக்கு வேண்டாத ஆணிகள்.


Srinivasan Krishnamoorthy
ஏப் 15, 2025 17:53

china is completely isolated, no other country to support china


M Ramachandran
ஏப் 15, 2025 17:50

சப்பைய்ய மூக்கன் நிறைய ஷ்டாக் வைத்திருக்கான் போல. உலகிலேஆஈஆ ஒரு நம்பக தன்மையில்லாத நாடு சீனா தன அதன் அரசு அங்குள்ள மக்களையும் வாட்டி வதக்க தயங்கு வதில்லை. அது ஒரு சர்வாதிகா நாடு. அடுத்து உள்ள அண்டை நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தல். சொல் காப்பாற்ற மாட்டான்.


sankaranarayanan
ஏப் 15, 2025 17:47

மானங்கெட்ட சீனாவிற்கு இன்னுமும் வேண்டும் இது போதாது இந்தியாவை வஞ்சித்த வஞ்சகன் கோமாளி எதனுக்கு எத்தனை உலகில் இருக்கிறான் என்றே சீனாவிற்கு அமெரிக்க காட்டிவிட்டது


ديفيد رافائيل
ஏப் 15, 2025 21:40

அதுக்காக இந்தியாவை போல சீனாவும் கைகட்டி அமெரிக்கா முன் மண்டியிட வேண்டுமா? அமெரிக்காவை விட்டா வாழ முடியாதுன்னு இந்தியால நினைக்குறானுங்க போல.


பெரிய ராசு
ஏப் 15, 2025 22:48

எப்படி ஒட்டக பாஷை இல்லைனா செத்துருவீங்களோ அந்தமாதிரி , எப்பவும் இந்தியாவை மட்டம் தட்டறது ...ஓங்கோல் புத்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை