உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வாய் கிழியப்பேசும் டிரம்ப் இனி அவ்வளவு தானா: தண்டனையை நிறுத்தி வைக்க கோர்ட் மறுப்பு

வாய் கிழியப்பேசும் டிரம்ப் இனி அவ்வளவு தானா: தண்டனையை நிறுத்தி வைக்க கோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்து விட்டு, போலிக்கணக்கு காட்டிய விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தண்டனையை நிறுத்தி வைக்க, அந்நாட்டு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அதிபர் தேர்தலில் அவருக்கு சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 77, 2016ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்கும் ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற ஆபாச பட நடிகைக்கும் இடையேயான உறவு குறித்து கிசுகிசுக்கப்பட்டது. இந்த விவகாரம் அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என கருதிய டிரம்ப், தன் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் வாயிலாக நடிகை ஸ்டார்மிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இந்த பணத்தை சட்ட ஆலோசனைக்கான கட்டணம் என போலிக்கணக்கு காட்டி தந்துள்ளார்.

மறுப்பு

இது தொடர்பாக டிரம்ப் மீது பல்வேறு மாகாணங்களில் நான்கு கிரிமினல் வழக்குகளும், 34 மோசடி வழக்குகளும் பதியப்பட்டன. இந்த வழக்கில், தண்டனையை நிறுத்தி வைக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில், இந்த விவகாரம் டிரம்பிற்கு தலைவலியை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வல்லவன்
ஆக 06, 2024 14:25

இதற்கு தண்டனை சில லட்சம் டாலர்கள் அவ்வளவுதான்


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 10:14

நல்லவேளை ....... டூ ஜி / கொலைஞர் டீவி விவகாரத்தில் மனைவிக்கு அல்சைமர் ன்னு உருட்டுனதை இந்திய சட்டங்கள் கண்டுபிடிக்கவில்லை ....


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 09:55

அமெரிக்க கோர்ட்டுகளிலும் இடதுசாரிக் கொள்கைகள் ஊடுருவியுள்ளன .......


Balasubramanian
ஆக 06, 2024 09:35

நல்ல தண்டனை கொடுங்கள்! எங்கள் நாட்டில் தண்டனை பெற்றும் போக்கு காட்டி சிறைக்கு பெப்பே காட்டும் லாலுக்கள் உள்ளனர்! சிலர் ஜாமீனுக்காக வாய்தா மேல் வாய்தா கொண்டு சிறையில் முதல் அமைச்சராகவும் இருக்கின்றனர்! எடுத்தற்கெல்லாம் அமெரிக்க என்று பேசுபவர்களுக்கு எடுத்து காட்டாக அமைகின்ற மாதிரி தண்டனை கொடுங்கள்


Ramesh Sargam
ஆக 06, 2024 07:49

முதலில் கோர்ட் ஏன் தண்டனையை நிறுத்திவைக்கவேண்டும்?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை