உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா; காரணம் இதுதான்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா; காரணம் இதுதான்!

ஒஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசு எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நார்வையில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m7x2jmft&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு நார்வே குழுவினர் அறிவித்தனர். வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்ததாக நார்வே குழுவினர் தெரிவித்தனர்.உலகம் முழுக்க சர்வாதிகாரம் என்ற இருள் விலகிவரும் நிலையில், அதற்காக போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் என நார்வே குழுவினர் பாராட்டியும் இருந்தனர்.இந்நிலையில், நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது. நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்கியதற்கு வெனிசுலா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.காரணத்தை தெரிவிக்காமல் கராகஸ் ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடிவிட்டதாக நார்வேயின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இந்த முடிவு வருந்தத்தக்கது. பல விஷயங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், வெனிசுலாவுடன் தொடர்ந்து உறவை விரும்புகிறோம் என்று நார்வே வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Balasubramanian
அக் 14, 2025 18:26

நாளை ராகுல் காந்திக்கு கொடுத்து விட்டால்? ஹூம் டிரம்பை விட அவர் பெரிதாக எதுவும் சாதித்து விடவில்லை! ஆகையால் நாம் தைரியமாக இருக்கலாம்!


Senthoora
அக் 14, 2025 20:28

அப்படித்தான் குடுத்தாலும், தைரியம் இருக்கா இந்திய தூதரகத்தை மூட? சும்மா முழங்காலுக்கு தாளிக்கும் முடிச்சு போடாதுங்க, போன வருடம் மோடிஜிக்கு குடுங்க என்று புலம்பி ஏமாத்திங்களே.


SUBRAMANIAN P
அக் 14, 2025 17:53

அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்குறததா இருந்தா எங்கூரு திருமாவுக்குத்தான் கொடுத்திருக்கவேண்டும். கொஞ்சம் வெய்யிட்டு பண்ணிருக்கலாம்.. அவசரப்பட்டு விட்டார்கள் நோபல் கமிட்டியினர். கடந்தவாரம் கோர்ட்டு வாசலில் எங்க திருமா செய்த ஒரு அமைதிப்போராட்டம் உலகப்ரஸித்தம்.. பரவாயில்ல.. இப்பவாவது அதை பறித்து எங்க திருமாகிட்ட கொடுங்க..


KOVAIKARAN
அக் 14, 2025 17:21

வெனிசுலா அரசு சுவீடனில் தூதரக அலுவலகத்தை மூடியது, அந்த நாடு அந்த அம்மையாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தது சரி என்று மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதோ? அதெல்லாம் இருக்கட்டும், வெனிசுலாவில் இப்போது அமைதி நிலவுகிறதா? போராட்டம் எல்லாம் முடிந்து மக்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக, பயமின்றி வாழ்ந்து வருகிறார்களா? நோபல் பரிசு தீர்மானிக்கும் கமிட்டி கொஞ்சம் அவரசரப்பட்டுவிட்டுவிட்டார்கள் என்றே தெரிகிறது.


N S
அக் 14, 2025 16:48

அப்பா தலையிட்டு விரைவில் தூதரகத்தை திறக்க உத்தரவிடுவார். இல்லையென்றால் காசா கதைதான்.


ஆரூர் ரங்
அக் 14, 2025 16:39

வெனிசூலா. எடுப்பது பிச்சை. இதில் வெட்டி கவுரவம் வேறா?


MUTHU
அக் 14, 2025 20:13

தவறு. மேற்கத்திய நாடுகள் மற்ற நாடுகளின் உள் விவகாரத்தில் தலையிட ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு உத்தி வைத்திருப்பார்கள்.


Anand
அக் 14, 2025 16:20

இப்போதெல்லாம் அமைதிக்கான நோபல் பரிசு என்பது ஒரு நாட்டை கெடுக்க உதவும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.


சமீபத்திய செய்தி