உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வடகொரியா தாக்கும் வரை காத்திருக்கணுமா? நட்பு நாடுகளை சீண்டிய உக்ரைன் அதிபர்

வடகொரியா தாக்கும் வரை காத்திருக்கணுமா? நட்பு நாடுகளை சீண்டிய உக்ரைன் அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: வடகொரியா ராணுவ வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வரும் நிலையில், தனது நட்பு நாடுகளின் நிலைப்பாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 2 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டு, போரை நிறுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டார். விரைவில் போர் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், போர் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது: உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரிய ராணுவத்தை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்காக, 3,000 வடகொரிய ராணுவ வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வருகிறது. வடகொரியாவுடன் ரஷ்யா வெளிப்படையான கூட்டு வைத்துக் கொண்டு, ஆயுதங்களையும், பீரங்கி குண்டுகளையும் வாங்கி குவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள வடகொரிய ராணுவத்தினர் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த நட்பு நாடுகள் அனுமதியளிக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, வடகொரியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் வரை தங்களின் நட்பு நாடுகள் காத்திருக்கின்றன, எனக் காட்டமாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sivakumar Sivakumar
நவ 03, 2024 11:14

இந்த கோமாளி உலக யுத்த த்த உண்டு பண்ணாமல் விடமாட்டான்


A Gnana Sekar
நவ 03, 2024 01:48

சொந்தபுத்தியில்லாமல் போனால் இப்படி அடுத்த நாட்டிடம் கெஞ்சவே நேரிடும்


A Gnana Sekar
நவ 03, 2024 01:37

இவன் அமெரிக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டு சொந்த மக்களை இவனே சாகடிக்கிறான்


A Gnana Sekar
நவ 03, 2024 01:35

இவன் அமெரிக்காவின்,பேச்சை கேட்டுக்கொண்டு உக்ரைன் மக்களை சாகடிக்காமல் அடங்கமாட்டான்


நிக்கோல்தாம்சன்
நவ 02, 2024 19:42

உக்ரைன் அதிபரே , உங்களை பார்க்கையில் எங்க ஊரு ஸ்டாலினும் , மம்தாவும் , அகஸ்டினும் , ஜாபர் சாதிக்கும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது , கொலைகார பாவி


Ramesh Sargam
நவ 02, 2024 13:37

நட்புநாடுகள் யோசிக்கவேண்டும். போரா , அல்லது அமைதி பேச்சு வார்த்தையா என்று. போரினால் உக்ரைன் அழிவது போதாது என்று, நட்புநாடுகளும் அழியவேண்டுமா..?


N.Purushothaman
நவ 02, 2024 14:43

நாட்டோ நாடுகளே தற்போது அமேரிக்கா மீது கடுப்பில் தான் இருக்கிறார்கள் ....நாட்டோ படையினர் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிற்கு எதிராக சண்டையிட்டு கொண்டு உயிரிழந்து கொண்டு இருக்கிறார்கள் ....


Narasimhan
நவ 02, 2024 13:18

யோகி பாபு கொஞ்சம் நன்றாகவே ஆட்சிபுரிவார். இந்த லூசுப்பய அமெரிக்கா பேச்சை கேட்டு தன் நாட்டை நிர்மூலமாக ஆக்கிவிட்டான். போர் நிறுத்தப்பட்டாலும் இந்த நாடு மீண்டும் எழ பல வருடங்களாகும்


A Gnana Sekar
நவ 03, 2024 01:42

கேட்பார் பேச்சைக் கேட்டால் நாட்டாமை பின்னால் தான் போகனும் இந்த கதிதான் உக்ரைனுக்கும்


Palanisamy Sekar
நவ 02, 2024 10:18

சினிமாவில் காமெடியனாக நடித்துக்கொண்டிருந்த உங்களுக்கு அரசியல் அனுபவமே போதவில்லை. நேட்டோ உறுப்பினராகி ரஷ்யாவை தாக்க கனவுகொண்டிருந்தீர். இப்போ அழுது பலனில்லை. போர் நிறுத்தினாலும் உமது நாட்டின் உள்கட்டமைப்பை மாற்றி அமைக்க இந்த ஜென்மம் போதாது. ராணுவத்தில் போரில் கணவனை இழந்த பெண்கள், கைகால்கள் இழந்த போர்வீரர்கள் நிலைமையை எண்ணிப்பாருங்கள். ரஷ்யாவுடனான சுமுக உறவுதான் உக்ரைனை காப்பாற்றும்


தத்வமசி
நவ 02, 2024 10:10

மக்கள் விவரத்துடன் ஒரு சிறந்த தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிகம் சிந்திக்கத் தெரியாதவரை, நாட்டு நலனில் அக்கறை இல்லாத கோமாளியை தேர்ந்தெடுத்தால் துயரம் மட்டுமே பரிசாக கிடைக்கும்.


Pandi Muni
நவ 02, 2024 17:00

மிகவும் சரி. சரியானவனை தேர்தெடுக்காமல் தமிழன் இப்போ தண்ணீரிலும் போதையிலும் தத்தளிக்கிறான்


N.Purushothaman
நவ 02, 2024 09:48

ரஷ்யாவுடன் சமரசம் அடைந்து அந்நாட்டிற்கு சென்ற உக்ரைன் படையை பத்திரமாக திரும்ப அழைத்து கொள்வது தான் சிறந்த முடிவாக இருக்கும் .. அமெரிக்காவின் பேச்சை கேட்டு நார்ட் எரிபொருள் குழாயை தாக்கி இன்று ஒட்டு மொத்த ஐரோப்பிய யூனியனும் உக்ரைன் மேல் கடும் கோபத்தில் இருக்க அமெரிக்காவோ இதை பயன்படுத்தி தன்னுடைய நாட்டில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஐரோப்பிய யூனியக்கு வழங்கி கொண்டே உங்களுக்கு ஆயுத உதவி செய்து கொண்டு இருக்கிறது ... உங்கள் படையினரோ உங்கள் பேச்சை கேட்டு ரஷியா உள்ளே சென்று இப்போ அங்கு அவர்கள் உங்கள் படையினரை சுத்தி வளைத்து கொடூர தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கின்றனர் .. உங்கள் தரப்பிலோ ராணுவ வீரர்களின் உயிர்சேதம் அதிகரித்து கொண்டே சென்று கொண்டு இருக்க பல ராணுவ வீரர்கள் சண்டையிடவே தயாராக இல்லாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று ஒதுங்கி கொண்டு இருக்கிறார்கள்..இதனால் உள்நாட்டில் மக்களிடமும் கடுமையான அதிருப்தி ஏற்பட நீங்கள் வேறு வழியில்லாமல் இன்று கெஞ்ச கூடிய நிலைமைக்கு சென்று உள்ளீர்கள் ...இது தேவையா ?. சினிமாவில் தான் காமெடியனாக நடித்தீர்கள் என்றால் இன்று நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு நிலைமை ஆகி விட்டது .. தற்போது கட்சி ஆரம்பிக்கிற தமிழ் .சினிமா நடிகர்களின் திறமையை தமிழ்நாட்டு பொது சனங்களும் புரிஞ்சிகிட்டா சரி .....


சமீபத்திய செய்தி