உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்

நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டமாஸ்கஸ்: 'நாங்கள் போருக்கு அஞ்சுவதில்லை' என ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் அகமது அல்-ஷாரா பதில் அளித்துள்ளார்.மேற்கு ஆசிய நாடான சிரியாவில், ஸ்வீடா மாகாணத்தில் ட்ரூஸ் சிறுபான்மையினர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் மீது, சிரிய அரசுக்கு ஆதரவான இஸ்லாமிய குழுவினர் சில நாட்களாக தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட சிறுபான்மை ட்ரூஸ் மக்கள் கொல்லப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1eqlkx7z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குறிப்பிட்ட இந்த பிரிவு சிறுபான்மையினர், இஸ்ரேல், லெபனான் நாடுகளிலும் வசிக்கின்றனர். இதனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்த இஸ்ரேல் ராணுவம், நேற்று சிரியா அரசுப்படைகள் மீது தாக்குதல் நடத்தியது. டமாஸ்கஸ் நகரில் இருக்கும் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவித்தது.இதை தொடர்ந்து, துருக்கி, அமெரிக்கா மேற்கொண்ட சமரச முயற்சியின் காரணமாக, சிரிய அரசுப்படைகள், ட்ரூஸ் சிறுபான்மை பகுதியில் தாக்குதலை நிறுத்தின. இஸ்ரேல் ராணுவமும் தாக்குதலை நிறுத்தியது.இந்நிலையில், சிரியா அதிபர் அகமது அல்-ஷாரா கூறியதாவது: நாங்கள் போருக்கு அஞ்சுவதில்லை. சவால்களை எதிர்கொண்டு எங்கள் மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் வாழ்க்கையை செலவிட்டுள்ளோம். சிரியா மக்களின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போராடத் தயாராக இருக்கிறோம். பொதுமக்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sasikumaren
ஜூலை 18, 2025 19:37

மேற்கு ஆசிய நாடுகளில் என்ன பிரச்சினை தான் போய் கொண்டு இருக்கிறது?


Nada Rajan
ஜூலை 18, 2025 05:16

சிரியாவால் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க எல்லாம் முடியாது


Thiru, Coimbatore
ஜூலை 17, 2025 23:33

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது இஸ்ரேலுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது... இதனால்தான் இப்போது அப்பாவி ட்ரூஸ் மக்கள் மீதான தாக்குதலை சிறிய இராணுவம் நிறுத்தி உள்ளது... இனியும் அவர்களை தாக்கினால் இஸ்ரேல் மீண்டும் உங்களை தாக்கும் மதத்தின் வழியே ஆட்சியை நடத்தினால் இனியும் அழிவு தான் ஏற்படும் என்பது உங்களுக்கு புரிந்தால் சரி


Kulandai kannan
ஜூலை 17, 2025 22:13

மீசையில் மண் ஒட்டவில்லை. மத்திய கிழக்கு நாடுகளெல்லாம் இன்று இஸ்ரேல் என்றால் அஞ்சுகின்றன.


Nada Rajan
ஜூலை 17, 2025 21:56

சிரியாவை எல்லாம் இஸ்ரேல் அடித்து நொறுக்கிவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை