உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் தேர்தலில் அவங்களுக்கு என்ன வேலை; ஈரான், ரஷ்யா, சீனா மீது குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் அவங்களுக்கு என்ன வேலை; ஈரான், ரஷ்யா, சீனா மீது குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஈரானை சேர்ந்த 3 ஹேக்கர்கள் தலையிடுவதாக கூறியுள்ள விசாரணை குழுவினர், அவர்கள் டிரம்ப் பிரசார குழுவை குறிவைத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரீஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தலையிடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஈரானை சேர்ந்த 3 ஹேக்கர்கள், டிரம்ப்பின் பிரசாரத்தை ஹேக் செய்யவும், சைபர் தாக்குதல் நடத்தவும் முயன்றனர். ஈரானுக்காக செயல்பட்ட இவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து நீண்ட நாட்களாக சதி செயலில் ஈடுபட்டனர். டிரம்ப் பிரசாரம் குறித்த தகவல்களை திருடி பல்வேறு பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், ஜோ பைடன் குழுவினருடன் தொடர்புடையவர்களுக்கும் அனுப்பினர். டிரம்ப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்ற வகையில் இவர்கள் செயல்பட்டு உள்ளனர். ஹேக்கிங்கில் ஈடுபட வேண்டும் என்பதற்காக முழு அளவில் தயாராகி வந்துள்ளனர். அதிபர் பிரசார குழுவினருடன் தொடர்புடையவர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற இவர்கள் முயற்சித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவனமும், ஈரான் தலையீடு குறித்து கடந்த மாதம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா, சீனா மீதும் குற்றச்சாட்டு

அதிபர் தேர்தலில் தலையிடுவதாக ரஷ்யா, சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கமலா ஹாரீசை ஆதரிப்பதாக டிரம்ப் குழுவினர் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அதேபோல், ரஷ்ய ஊடகங்களும் தலையிடுகிறது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.தங்களுக்கு கொள்கைக்கு ஏதுவாக யார் இருப்பார்கள் என கருத்தில் கொண்டு சீனாவும், தலையிடுகிறது எனவும் குற்றம்சாட்டி உள்ளது. ஆனால், இதனை இரண்டு நாடுகளும் மறுத்துவிட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kevin
செப் 28, 2024 19:54

அபகே பார் கிஸ்கா சர்க்கார்? ஜீ க்கே தெரியலியாம்.


தஞ்சை மன்னர்
செப் 28, 2024 10:49

தன் வினை தன்னை சுடும் பொது கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும் அவர்கள் நாட்டு அரசியல் விவகாரங்களில் நீங்கள் தலையிடும் பொது வலித்து இருக்கவேண்டும் அப்போது அவர்கள் சிந்தும் ரத்தத்தை ரசித்து குடித்த உங்களுக்கு இப்போது சிந்திப்போகும் ரத்தத்தை ருசிக்க ஆயத்தப்படுத்தி கொள்ளுங்கள்


Ramanujan
செப் 28, 2024 10:14

இந்திய தேர்தலில் அமெரிக்காவுக்கு என்ன வேலையோ அதே வேலைதான்.


Barakat Ali
செப் 28, 2024 09:59

அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்கிறார்கள் ..... உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள் .....


Gokul Krishnan
செப் 28, 2024 09:55

பங்களாதேஷ் ஆட்சியை நாம கவிழ்த்தோம் இந்திய தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த பெரும்பாடுபட்டோம் ஓய் வை சி ராவுல் வின்சியை தூண்டி விட்டோம் நீ எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வாய்


S Parthasarathy
செப் 28, 2024 09:38

இதையே நாங்களும் கேட்கிறோம். இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க இந்திய எதிர்கட்சிகளை விட அதிகமாக ஆர்வம் காட்டி பாடுபட்டீர்களே ஏன்?


GoK
செப் 28, 2024 08:38

இந்த ஆண்டு இந்திய தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அமரிக்காவிலுருக்கும் "உலகப்புகழ்" நடுநிலை நாளிதழ்கள் நம்ம ஊரு ராசா வம்ச இளவரசருக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு எழுதினது மட்டுமில்ல வோட்டு பதிவு ஐந்திரம் தப்பானது, இளவரசன் சொன்னது போல சனநாயகம் செத்து போச்சு அப்படின்னு ஒப்பாரி வெச்சீங்களே ? அது பரவாயில்லையா?


RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 08:35

நாங்க அமெரிக்கா ..... பெரிய வல்லரசு ..... எங்க நாட்டின் கண்ணில் இவங்கல்லாம் விரலை விட்டு ஆட்டுறாங்க ..... ஒண்ணும் பண்ண முடியல .... ஆனா பன்னூன் மீதான கொலைமுயற்சி குறித்து நாங்க விசாரிப்போம் .... இந்தியாவுக்கு ஆஜர் ஆகும்படி நோட்டீஸ் கொடுத்திருக்கோம் .....


சிவா அருவங்காடு
செப் 28, 2024 07:50

முன்பு பிற நாடுகளில் நீங்கள் செய்தது. இப்போது உங்களுக்கு திரும்புகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை