உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா இடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா: ஜெய்சங்கர் பதில்

ரஷ்யா இடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா: ஜெய்சங்கர் பதில்

பெர்லின்: ஜெர்மனியில் பல்வேறு நாட்டு அமைச்சர்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில், தொகுப்பாளர் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு 'எங்களிடம் திறமை உள்ளது, ரஷ்யாவிடமிருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குகிறோம்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார்.ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வ தேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கேள்வி

ஒருபகுதியாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அனலினா பியர்பாக் ஆகியோர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதும் உங்கள் எதிர்தரப்பில் உள்ள அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதா? என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

பதில்

இதற்கு ஜெய்சங்கர் அளித்த பதில்: எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளனவா? என்பது உங்கள் கேள்வி. எங்களிடம் திறமை உள்ளது, ரஷ்யாவிடமிருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குகிறோம். நிறைய வாய்ப்புகளை உருவாக்க எங்களிடம் திறமை இருக்கும்போது அதற்காக நீங்கள் எங்களை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சிக்கக்கூடாது. இது மற்றவர்களுக்கு ஏதேனும் பிரச்னையை உருவாக்குமா என்றால் நிச்சயம் உருவாக்காது. வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு வரலாறுகள் மற்றும் சவால்கள் உள்ளன. ஆனால் மற்ற நாடுகளுடன் உறவை கொண்டிருப்பது மிகவும் கடினம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பேசும் தமிழன்
பிப் 18, 2024 19:11

கேள்வி கேட்கும் நாட்டிடம் .....நீங்கள் அதை விட பத்து ரூபாய் குறைவாக கொடுங்கள் ......உங்களிடம் வாங்கி கொள்கிறோம் என்று கூறுங்கள் .....அப்புறம் வாயே திறக்க மாட்டார்கள் !!!


Kalyan Singapore
பிப் 18, 2024 15:00

உள்ளூர் விலையை இரண்டு வருடங்களாக ஒரே நிலையில் வைத்திருப்பதனால் மக்களுக்கு அது பழகி விட்டது . அந்த விலையில் விற்கும் லாபத்தை முந்தைய அரசு ஏற்படுத்திய எண்ணெய் நிறுவனங்களின் வெளிநாட்டு கடன்களை ( சுமார் நாலரை லட்சம் கோடி ) அடைக்க பயன் படுத்தியதாக பிரதமரே ஒரு உரையில் ஒப்புக்கொண்டு அதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார் . தமிழக ஊடகங்கள் அதை இருட்டடிப்பு செய்து விட்டன


aaruthirumalai
பிப் 18, 2024 14:57

இதுதான் கெளரவம், இதுதான் பெருமை.


Oviya Vijay
பிப் 18, 2024 13:30

என்ன பிரயோஜனம்... எண்ணெய் ரேட் கம்மியா வாங்குனாலும் உள்ளூர் மார்க்கெட்ல விலையை கம்மி பண்ணாம இருக்குறதுக்கு பேரு சாதனையா... மக்களுக்கு தெரியும் அதோட வேதனை...


karupanasamy
பிப் 18, 2024 14:57

விடியல் குடுத்த தேர்தல் வாக்குறுதி பெட்ரோல் ஐந்து ரூபாயும் டீசல் பத்துரூபாயையும் குறைக்க koovunga


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 18, 2024 15:41

விடியலை போயி கேளு ஓவியா .....


குமரன்
பிப் 18, 2024 13:22

இவரது அறிவார்ந்த பதிலில் இந்தியாவின் ஆளுமையை எதிரொலித்தது


அப்புசாமி
பிப் 18, 2024 12:33

இங்கே போருக்கான நேரமில்லைன்னு ஒருத்தர் சொல்லுவாரு.


duruvasar
பிப் 18, 2024 11:54

நெத்தியடி பதில். ஜெய்சங்கர் போல் சமயோசிதமாக அறிவார்ந்த பதிலளிக்கும் திறமையை இதுவரை இந்திய வெளியுறவுத்துறையில் கண்டதில்லை. நற்பணிகள் தொடரட்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 18, 2024 11:50

ஆங்கிலத்தில் அவரின் பதில் மிக அழகாக, அறிவுபூர்வமாக இருந்தது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை