உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‛‛ஜி மெயிலுக்கு போட்டியாக ‛‛ எக்ஸ் மெயில் : எலான் மஸ்க் திட்டம்

‛‛ஜி மெயிலுக்கு போட்டியாக ‛‛ எக்ஸ் மெயில் : எலான் மஸ்க் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ‛‛ஜி'' மெயில் சேவைக்கு போட்டியாக ‛‛எக்ஸ்'' மெயில் துவங்க உலகின் முன்னணி தொழிலதிபரும் ‛‛எக்ஸ்'' நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலகளவில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை 2022ம் ஆண்டு எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்தே, அதன் பெயரை ‛‛எக்ஸ்'' என பெயர் மாற்றம் செய்து, நீலநிற குருவி லோகோவை மாற்றி பல அதிரடி மாற்றங்களை செய்தார்.இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் ‛‛ஜி'' மெயில் சேவைக்கு போட்டியாக ‛‛எக்ஸ்'' மெயில் என்ற பெயரில் சேவையை துவக்க எலான் மஸ்க் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பல்வேறு இணையதள செய்திகள் உறுதி செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை