உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ காமாட்சி மந்திரில் ஆதி சங்கரர் ஜெயந்தி மஹோத்ஸவம்

புது தில்லி: அருணா அசப் அலி மார்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ ஆதி சங்கர ஜெயந்தி அனுஷ்டிக்கபட்டது. காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், மஹன்யாஸ பாராயணம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீ சங்கர பகவத் பாதாளுக்கு அபிஷேகம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். கோவிலில் அமைந்துள்ள ஆதிசங்கரர் ஸ்வாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை உபநிஷத் வேத பாராயணம் மற்றும் பாதுகை பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ஆதி சங்கரர் திருஉருவப்படம் ஏந்தி கோயில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் நாதஸ்வர இசையுடன் வலம் வந்தனர். 2534 - வது ஆண்டு ஜெயந்தி விழா ஆதிசங்கரரின் 2534 - வது ஆண்டு ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதிக்கு தெய்வீகக் குழந்தையாக இந்த பூமியில் அவதரித்தவர் ஆதி சங்கரர். 32 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார். 8 வயதில் வேதமும், 12 வயதில் சாஸ்திரமும், 16 வயதில் பாஷ்யமும் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். சங்கரர் சனதான தர்மம் மற்றும் அத்வைத வேதத்தை நமக்கு போதித்தார். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !