துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ராமநவமி நிறைவு விழா
புதுதில்லி: ஸ்ரீ ராமநவமி நிறைவு நாளையொட்டி, துவாரகா ஸ்ரீராம் மந்திரில் காலை பட்டாபிஷேக ஹோமம் நடைபெற்றது. ஸ்ரீ சரவண சாஸ்திரிகள் தலைமையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் தொடங்கி இறுதியாக பட்டாபிஷேக ஹோமத்துடன் நிறைவுற்றது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பரிவார பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்