பஞ்சாங்க படனம் நொய்டாவிலும் வாசிப்பு
வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வாகம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்க படனம் நொய்டாவின் செக்டர் 62, ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீதர் வாத்தியார் பஞ்சங்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார், மேலும் திதி, நட்சத்திரம் மற்றும் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதையும் விரிவாகக் கூறினார். இதே போல் வி பி எஸ் நிர்வகித்து வரும் நொய்டா செக்டர் 22 உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் நடந்தன. அனைவருக்கும் நீர் மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வகித்தனர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு ஸ்ரீதரையும் கவுரவித்தார். - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்